Home தமிழகம் கச்சத்தீவு அருகே துப்பாக்கி முனையில் இராமேஸ்வரம் மீனவர்களின் படகு உடைப்பு

கச்சத்தீவு அருகே துப்பாக்கி முனையில் இராமேஸ்வரம் மீனவர்களின் படகு உடைப்பு

12

இராமநாதபுரம்: ஜன 07

கச்சத்தீவு அருகே துப்பாக்கி முனையில் இராமேஸ்வரம் மீனவர்களின் படகு உடைப்பு. மீனவர்களை தாக்கி கடலில் முழ்கடித்து இலங்கை கடற்படை அட்டூழியம். பலத்த காயத்துடன் மீனவர் இராமநாதபுரம் மருத்துவமனையில் அனுமதி.

கச்சத்தீவு  அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த இராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தி படகுகளை சேதப்படுத்திய சம்பவம் மீனவர்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை இராமேஸ்வரம் பகுதியிலிருந்து சுமார் 550க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் மீ;ன்பிடி அனுமதி டோக்கன் பெற்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். காலை 11 மணியளவில் கச்சத்தீவுக்கு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் துப்பாக்கியை காட்டி அச்சுறுத்தி படகை நிறுத்தச் சொல்லியதுடன் படகில் மோதி சேதப்படுத்தியுள்ளனர். இதனையடுத்து டிடிக்ராஜ், சேது, அருள், வெனிஸ்டன், சுரேஸ், மேத்யூ உள்ளிட்ட மீனவர்கள் மீது கயிரைக் கொண்டு தாக்குதல் நடத்தியதோடு டிடிக்ராஜ் என்பவரை கடலில் தள்ளி கொலை முயற்சியல் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து எங்கிருந்தோ வயர்லெஸ்சில் தகவல் வந்ததையடுத்து ரோந்துபடகு திரும்பிச் சென்றுள்ளது.

நடுக்கடலில் ஆபத்தான நிலையிலிருந்த டிடிக்ராஜை சகமீனவர்கள் மீட்டு மாலை 4.30 மணியளவில் இராமேஸ்வரம் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சையளிக்கப்பட்டு இராமநாதபுரம் அரசு மருத்துமனையில் மேல் சிகிச்சைக்காக சேர்த்து தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.