கச்சத்தீவை மீட்க வேண்டும் தொடர்ந்த வழக்கை முடித்து வைப்பதாக உச்ச நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்

கச்சத்தீவை மீட்க வேண்டும் என தமிழக முன்னாள் முதல்வரான ஜெயலலிதா தொடர்ந்த வழக்கை முடித்து வைப்பதாக உச்ச நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இந்திய பிரதமராக இந்திரா காந்தி பதவி வகித்தபோது கடந்த 1974-ம் ஆண்டு இலங்கைக்கு கச்சத்தீவை தாரை வார்த்து கொடுத்தார்.

இதற்கு தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்புகள் கிளம்பியது. கச்சத்தீவை மீட்டு இந்தியாவுடன் இணைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் போராட்டங்களை நடத்தினர்.

இந்நிலையில், கச்சத்தீவு தமிழகத்தின் ஒருப்பகுதி எனவும், அதனை மீட்க வேண்டும் என வலியுறுத்தி முன்னாள் முதல்வரான ஜெயலலிதா கடந்த 1998-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கானது பல்வேறு கட்டங்களை கடந்து விசாரணை நடைபெற்று வந்தது.

இந்நிலையில், இவ்வழக்கு தொடர்பாக இன்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின்போது மனு தொடர்ந்த ஜெயலலிதா காலமாகிவிட்டதால் இனிமேல் இந்த வழக்கை விசாரிக்க முடியாது.

உச்ச நீதிமன்றத்தில் இவ்வழக்கு முடிவு பெற்று விட்டதாக கூறி நீதிபதி செல்லமேஸ்வர் வழக்கினை முடித்து வைப்பதாக உத்தரவிட்டுள்ளார்.

You might also like More from author

Facebook Auto Publish Powered By : XYZScripts.com