கட்சியை பற்றி சமூக வலைத்தளத்தில் விமர்சிப்பவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள்: விஜயகாந்த்

சென்னை:

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தே.மு.தி.க. தலைமை கழக நிர்வாகிகள், உயர்மட்டக்குழு உறுப்பினர்கள், கட்சி அணி செயலாளர்கள், தொழிற்சங்க நிர்வாகிகள், மாவட்ட கழக செயலாளர்கள், ஒன்றியம், நகரம், பகுதி, பேரூர், ஊராட்சி, வார்டு, வட்டம், கிளை கழக நிர்வாகிகள் மற்றும் கட்சி தொண்டர்கள் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்வது என்னவென்றால், சமூக வலைத்தளங்களான பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்-அப் போன்றவற்றில் தலைமை கழகத்தை பற்றியோ, கட்சி நிர்வாகிகளை பற்றியோ, தனிப்பட்ட நபரை பற்றியோ, விமர்சனமோ, கேலி-கிண்டல் செய்வதை நமது கட்சி ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது.

எனவே சமூக வலைத்தளங்களில் இதையும் மீறி பதிவு இடுபவர்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவார்கள். அதே போன்று தனித்தனியாக பேஸ்புக்கில் குழுக்களாக அமைத்து செயல்படுவதையும் தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

You might also like More from author