Home அழகு கண்டவுடன் கவர்ச்சி, அழகின் இலக்கணம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்

கண்டவுடன் கவர்ச்சி, அழகின் இலக்கணம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்

47

கண்டவுடன் கவர்ச்சி, இதுதான் அழகின் இலக்கணம் என்று எழுதப்படாத சட்டத்தை எல்லோரும் கடைப்பிடிப்பதுதான் கொடுமையிலும் கொடுமை. அழகின் திறவுகோள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். அந்த ஆரோக்கியம் ஆயுர்வேதத்தில் மட்டும் தான் உள்ளது என்பதை நாம் திரும்பத்திரும்ப சொல்லிவருகிறோம். அழகும், ஆரோக்கியமும் ஆணுக்குத் தனி, பெண்ணுக்குத் தனி என்றில்லை. என்றாலும், ஒரு சில அழகு குறிப்புகள் பெண்களுக்கு மட்டுமே பொருந்தும். 40 வயதைக் கடந்த பெண்கள் தங்களின் உடல் நலத்தின் மீது அக்கறை இல்லாத காரணத்தால் உணவு உண்பதில் கவனம் செலுத்துவதில்லை என்று நாம் குறிப்பிட்டிருந்தோம்.

அதுபோல் தான் இளமையில் தங்களின் இளம் மேனியில் இருக்கும் அக்கறையை நாளாக நாளாக, அதாவது தாய்மை அடைந்ததுமே தகர்ந்துபோய் விடுகிறது. அது மிகவும் தவறு. சரி அப்படியே அக்கறை கொள்ளும் மங்கையர்கள் தங்களின் அழகுக்கு அழகு சேர்க்க அந்நிய நாட்டின் ரசாயன கலவை கழிவுக்களிம்புகளையே தங்களின் மேனிக்கு மெருகூட்டத் தேய்த்துக் கொள்கிறார்கள்.

அது நாள்பட நாள்பட சரும வியாதியில் ஆரம்பித்து, பிறகு உடலில் ஊடுருவி ரத்தத்தில் உயிர் திசுக்களை கொஞசம் கொஞ்சமாக கொன்று உடலையும், முகத்தையும் வெளிரவைக்கும். பட்டுபோன்ற மேனிக்கு பர்மா சோப், கர்மா ஷேம்பு என்று காசு கொடுத்து கடிநாயை ஏன் விலைக்கு வாங்கவேண்டும்.

நமக்கு இயற்கை அள்ளித்தந்துள்ள அபூர்வ ஆயுர்வேத மூலிகையின் மருத்துவ குணங்களைத் தெரிந்து கொண்டு அதை ஏன் நம் ஆரோக்கியத்துக்காக அனுமதிக்ககூடாது. அப்படிப்பட்ட அரிய மூலிகை தயாரிப்பில் ஒன்று தான் எங்களின் GCT Herbal Bath Powder. இதில் கஸ்தூரி மஞ்சள், பூலாங்கிழங்கு, ரோஜா, முல்தானிமட்டி, ஆவாரம் பூ, புதினா போன்றவை கலந்துள்ளது. இவைகளின் மருத்துவ குணங்களை என்னவென்று பார்ப்போம் :

கஸ்தூரி மஞ்சள் மருத்துவ பயன்கள் : 

விரலி மஞ்சள், கரி மஞ்சள், கஸ்தூரி மஞ்சள் என மஞ்சளில் பல வகைகள் உள்ளன. தோலில் வெப்பத்தை உண்டாக்கி, கிருமிகளை அகற்றும் என்பதால், தோல் சம்பந்தப்பட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு, கஸ்தூரி மஞ்சள் சிறந்த நிவாரணி. மார்க்கெட்டில் இருக்கும் பல்வேறு கிரீம்களும் கஸ்தூரி மஞ்சள் சேர்க்கப்பட்டவைதான். வெறும் அழகு சாதனப் பொருளாக மட்டுமின்றி, அஜீரணத்துக்கு மருந்தாகவும் மஞ்சள் பயன்படுகிறது.

கஸ்தூரி மஞ்சள் எனப்படுவது காய்ந்த கிழங்குகளே ஆகும். கத்தூரி மஞ்சள் என்றும் கூறப்படும். கஸ்தூரி மஞ்சள் கைப்புச் சுவையும் வெப்பத் தன்மையும் கொண்டது.

கஸ்தூரி மஞ்சள் பெரும்பாலும், வெளி உபயோகத்திற்கான மருந்தாகப் பயன்படுகின்றது. அரைத்துப் பசையாக்கி தேய்த்துக் குளிக்க கரப்பான், கிருமிநோய்கள் போன்றவற்றைப் போக்கும். தோல் பளபளப்பாகும்.

கஸ்தூரி மஞ்சள் மலைப் பகுதிகளில் இயல்பாக வளர்ந்தாலும் இதன் மருத்துவ மற்றும் வாசனை பண்புக்காக பெருமளவில் பயிர் செய்யப்படுகின்றது. செடியின் கிழங்குகள் காய வைக்கப்பட்டு மணமுள்ள கஸ்தூரி மஞ்சளாக நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கின்றன.

தோல் நோய்கள் தீர கஸ்தூரி மஞ்சள் தூளை வெந்நீரில் குழைத்து மேல் பூச்சாகப் பூசிவர வேண்டும் அல்லது கஸ்தூரி மஞ்சள், துளசி ஆகியவற்றைச் சம அளவாகச் சேர்த்து, அரைத்து, உடலில் தேய்த்து, சிறிது நேரம் கழித்து, வெந்நீரில் குளிக்க வேண்டும்.

கஸ்தூரி மஞ்சளை நல்லெண்ணெய் விளக்கில் சுட்டு, அப்போது ஏற்படும் புகையை மூக்கின் வழியாக உள்ளே இழுக்க காசநோயின் போது ஏற்படும் இரைப்பு கட்டுப்படும்.

கஸ்தூரி மஞ்சளை தூள் செய்து 100 முதல் 250 மிகி வரை வெந்நீரில் சாப்பிட்டு வர சொறி சிரங்கு குணமாகும்.

½ லிட்டர் தேங்காய் எண்ணெயில், 50 கிராம் கஸ்தூரி மஞ்சள் தூளைப் போட்டு காய்ச்சி வடிகட்டி வைத்துக் கொண்டு, மேல் பூச்சாகக் பூசி வர உடல் வலி தீரும்.

இத்தகைய மகத்துவமுள்ள கஸ்தூரி மஞ்சளை எங்களது GCT Herbal Bath Powderல் சேர்த்துள்ளோம். மேலும் இது குறித்து அடுத்த பகுதியில் காண்போம்.

உங்கள் ஆரோக்கியம் உங்கள் கையில், இலவச இயற்கை ஆலோசனைகள் பெற GCT Nature’s Gift,Herbal & Ayurvedic Products,7402081981 என்ற எண்ணில் டாக்டர் சாருமதியை தொடர்பு கொள்ளலாம்.