கயல் ஆனந்தி தற்போது என் ஆளோட செருப்பக் காணோம் என்ற படத்தில் நடிக்கவுள்ளார்

கயல் படத்திற்கு பிறகு தொடர்ந்து ஜீ.வி. பிரகாஷ் படத்தின் நாயகி நடித்து வந்தார் கயல் ஆனந்தி.

இவர் தற்போது என் ஆளோட செருப்பக் காணோம் என்ற படத்தில் நடிக்கவுள்ளார். தமிழ் சினிமாவில் டைட்டில் நிலவும் தட்டுப்பாட்டையொட்டி மக்களின் கவனத்தை திருப்ப இப்படியெல்லாம் வித்தியாசமாக டைட்டில் வைக்கின்றனர்.

புதுமுக நாயகன் நடிக்கும் இந்த படத்தில், ஆனந்தி தன் ஒரு ஜோடி செருப்புகளை ஒரு அடை மழை காலத்தில் அது தொலைந்து விடுகிறது. அந்த செருப்பு மிகவும் விலை குறைவானதுதான். ஆனால் ஒரு வகையில் அது அவளுக்கு மிக முக்கியமானது. காதலி தொலைத்த செருப்பைத் தேடி காதலன் குடையுடன் செல்கிறான். செருப்பு கிடைத்ததுதா? காதல் கைகூடியதா? அந்த செருப்பில் அப்படி என்னதான் சிறப்பு என்பது பற்றிய கதை.

30 நாளில் நடக்கிற கதை. மனிதன் உடலோடு ஒட்டிய செருப்பு மனிதனோடு எந்த அளவிற்கு பின்னி பிணைந்திருக்கிறது என்பதை சுவாரஸ்யத்தோடு சொல்கிறேன்” என்கிறார் இயக்குனர் ஜெகன்நாத்.

இன்னும் எப்படியெல்லாம் படத்தின் தலைப்பு வரப்போகிறதோ?

You might also like More from author