Mar 9, 2017
2 Views
0 0

கள்ளச் சாராயம் பறிமுதல்

Written by
banner

திருவண்ணாமலை, மார். 9:

திருவண்ணாமலை மாவட்டம் தானிப்பாடி பகுதியில்
போலீசாரின் அதிரடி ரெய்டில் 300 லிட்டர் கள்ளச்சாராயம் கைபற்றி
அழிக்கப்பட்டது. தானிப்பாடி பகுதியான மலையனூர்
செக்கடி,ரெட்டியார்பாளையம்,பீமரப்பட்டி,மோத்தக்கல் காலனி,மோத்தக்கல் ஆகிய
பகுதிகளில் தானிப்பாடி எஸ்எஸ்ஐ சுப்ரமணியன் தலைமையில் நேற்று முன் தினம்
திடீர் கள்ளச் சாராய வேட்டையில் ஈடுபட்ட போது அண்ணாமலை (38), மஞ்சு (54),
ஆறுமுகம் (42), முனுசாமி (49) மற்றும் லட்சுமணன் (42) ஆகியோர் வீட்டின்
பின்புறம் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 300 லிட்டர் கள்ளச்
சாராயத்தை போலீசார் கைபற்றி அழித்தனர். இவற்றின் மதிப்பு ரூ 2000 ஆகும்.
கள்ளச் சாராய வியாபாரிகளை கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும்
தொடர்ந்து இந்த சமூக விரோத செயல்களை தொடர்ந்து செய்பவர்கள் மீது குண்டர்
சட்டம் பாயுமென எச்சரித்துள்ளனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Facebook Auto Publish Powered By : XYZScripts.com