காவலர் பணிக்கான தேர்வு 21,187 பேர் தேர்வு எழுதினர்

திருவண்ணாமலை, மே.22:

திருவண்ணாமலை மாவட்டத்தில் 2ம் நிலை பணிக்கான
போட்டி தேர்வு 25 மையங்களில் 21,187 பேர் தேர்வு எழுதினர். தமிழ்நாடு
சீருடை பணியாளர் தேர்வு வாரியம் மூலம் காவல்துறையினர் காலியாக உள்ள 2ம்
நிலை காவலர் சிறைதுறையில் 2ம் நிலை சிறை காவலர் தீயணைப்பு தறையில்
தீயணைப்பவர் உள்பட மொத்தம் 15,711 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.
இதையட்டி கடந்த ஜனவரி 21ந் தேதி முதல் பிப்ரவரி 22ந் தேதிவரை
விண்ணப்பங்கள் பெறப்பட்டன. 10ம் வகுப்பு கல்வி தகுதி அடிப்படையாகக்
கொண்டு தேர்வு நடத்தப்படுகிறது. 18 வயது முதல் 24 வயதுக்குட்பட்டவர்கள்
இத்தேர்வில் பங்கேற்றுள்ளனர். எஸ்சி எஸ்டி, விதவை முன்னாள்
படைவீரர்களுக்கு வயது வரம்பில் சலுகை அளிக்கப்பட்டுள்ளது. எழுத்து தேர்வு
உடல் தகுதி தேர்வு ஆகியவற்றில் தேர்ச்சி பெறும் நபர்களில் இறுதி பட்டியல்
அடிப்படையில் சிறப்பு காவல்படையில் 4,589 பேர் ஆயுதப்படையில் 4,627 பேர்
சிறை காவலர் பணியில் 976 பேர் தீயணைப்பு துறையில் 1512 பேர் நியமனம்
செய்யப்படவுள்ளனர். இந்நிலையில் சீருடை பணியாளர் பணிநியமனத்திற்கான
போட்டி தேர்வு மாநிலம் முழுவதும் நேற்று நடைபெற்றது அதன்படி திருவண்ணாமலை
மாவட்டத்தில் 25 தேர்வு இடங்களில் சீருடை பணியாளர் போட்டி தேர்வுக்கான
தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இவற்றில் 21 ஆயிரத்து 187
இளைஞர்கள் தேர்வு எழுதினர். தேர்வு மைய கண்காணிப்பு பணியில் மாவட்ட
காவல்துறை கண்காணிப்பாளர் இரா.பொன்னி மேற்பார்வையில் 1060 போலீசார்
ஈடுபட்டிருந்தனர்.

You might also like More from author