காஷ்மீரின் மெந்தார் செக்டாரில் பாகிஸ்தான் துப்பாக்கிச் சூடு தாக்குதல் – 45 வயது மிக்க பெண் பலி

காஷ்மீரின் மெந்தார் பகுதியில் இன்று காலை 5:30 மணியளவில் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச்சூட்டில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் பலியானார்.
துப்பாக்கிச்சூட்டில் இறந்த பெண் மெந்தார் பகுதியின் மேல் கோலாட்டில் வசித்துவந்த 45 வயதான ரகியா பேகம் என மெந்தார் துணை-பிரதேச போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.
நேற்றிரவு வடக்கு காஷ்மீரின் கலரோஸ் குப்வாரா மாவட்டத்தின் காட்டுப்பகுதியில் அமைந்துள்ள 42 ராஷ்டிரிய ரைஃபிள்ஸ் தலைமையகத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் ஒரு ராணுவவீரர் காயமடைந்தார். அவரை உடனடியாக தர்க்முல்லா ராணுவ மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த தாக்குதல் சம்பவங்களில் ஈடுபட்டவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

You might also like More from author