கிராம உதவியாளர் பணி நியமனத்தில் முறைகேடு? அதிகாரிகள் மீது நடவடிக்கை தேவை கிராமப்புற பொதுமக்கள் கோரிக்கை

திருவண்ணாமலை, ஏப். 1:

திருவண்ணாமலை வருவாய் கோட்டத்தில் கிராம உதவியாளர்
நியமனத்திற்கு கையூட்டு பெற்றுக் கொண்டு தகுதியற்றவர்களுக்கு பணிநியமன
ஆணை வழங்கியதில் மாவட்ட ஆட்சியர் விசாரணை செய்ய வேண்டும் என கிராம
பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை வருவாய்
கோட்டத்திற்குட்பட்ட திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர், தண்டராம்பட்டு,
போளூர், ஆகிய தாலுக்காக்களில் கிராம உதவியாளர்கள் பணி காலியிடங்கள்
15க்கும் மேற்பட்ட இடங்கள் இருந்தன.இந்த காலி பணியிடங்களை நிரப்ப அரசு
தரப்பில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் நேரடி விண்ணப்பங்கள்
மூலமும் மனுக்கள பெறப்பட்டு இதற்கான நேர்முக தேர்வும் நடந்துள்ளன. இதில்
சம்பந்தப்பட்ட வருவாய்த்துறையினர் உயர்அதிகாரி மற்றும் அவரது முன்னாள
நேர்முக உதவியாளர் ஆகியோர் நேர்முக தேர்வில் கலந்து கொண்ட திறமையான
விண்ணப்பதாரர்களை தவிர்த்துவிட்டு அவர்கள் கேட்ட கையூட்டு தொகையினை
வழங்கியவர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் ஏழைக்குடும்பங்களைச்சேர்ந்த திறமையான அனைத்து தகுதியும் கொண்ட
விண்ணப்பதாரர்கள் மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். மேலும் திறமையுள்ளவர்களை
தேர்வு செய்வதில் சம்பந்தப்பட்ட கிராமங்களில் பணிகள் சரிவர நடைபெறாமல்
பாதிக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. உதாரணமாக
கீழ்பென்னாத்தூர் தாலுக்காவில் கல்லாய் சொரத்தூர் கிராம உதவியாளர்
பொறுப்பில் இருந்து குணசீலன் என்பவரை நாரையூருக்கு மாற்றம் செய்துவிட்டு
கல்லாய் சொரத்தூர் கிராம உதவியாளர் பணிக்கு குணசீலன் மகன் தர்மசீலன்
என்பவரை கலப்பு திருமணம் செய்து கொண்டதற்காக அதன் சான்றிதழ் அளித்து
கல்லாய் சொரத்தூர் கிராம உதவியாளராக பணிநியமனம் பெற்றுள்ளனர். இதேபோன்று
அனைத்து காலிபணியிடங்களுக்கும் பணிநியமன ஆணை தகுதியற்றவர்களுக்கு பணி
வழங்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. எனவே இதுபோன்ற பணிநியமன ஆணைகளை
ரத்து செய்துவிட்டு மீண்டும் மாவட்ட ஆட்சியர் நேரடி பொறுப்பில் நேர்முக
தேர்வு நடத்தி திறமையானவர்களுக்கு பணிநியமனம் செய்ய வேண்டுமென்றும்
மேலும் இந்த பணிநியமனத்தில் தவறுகள் செய்த அதிகாரிகள் மீது ஆட்சியர்
விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதே சம்பந்தப்பட்ட
கிராமங்களின் பொதுமக்களின் கோரிக்கை ஆகும்.

You might also like More from author

Facebook Auto Publish Powered By : XYZScripts.com