Mar 21, 2017
14 Views
0 0

கீழ்பென்னாத்தூர் தொகுதிக்குட்பட்ட பகுதியில் நாட்டுநலப்பணி திட்ட சிறப்பு முகாம் மரக்கன்று நட்டு முன்னாள் அமைச்சர் பிச்சாண்டி எம்எல்ஏ துவக்கிவைத்தார்

Written by
banner

திருவண்ணாமலை, மார். 21:

திருவண்ணாமலை அருகே இராஜன்தாங்கல் கிராம சேவை
மைய கட்டிடத்தை சென்னை அண்ணா பல்கலைக்கழகம், தி.மலை எஸ்கேபி பொறியியல்
கல்லூரி இணைந்து நடத்தும் நாட்டு நலப்பணி திட்டத்தின் சிறப்பு முகாம்
வரும் 24ந் தேதிவரை நடைபெறவுள்ளது. முதல் நாள் நிகழ்ச்சி நேற்று
முன்தினம் நடைபெற்றது. இந்த சிறப்பு முகாமிற்கு தலைமை யேற்று  முன்னாள்
அமைச்சர் கு.பிச்சாண்டி மரக்கன்று நட்டு விழாவினை துவக்கிவைத்தார் அதனைத்
தொடர்ந்து நேற்று நடைபெற்ற முகாமில் தோட்டக்கலை உதவி இயக்குநர் ப.அன்பரசு
இயற்கை வேளாண்மை பற்றிய விழிப்புணர்வை பொதுமக்களுக்கு வழங்கினார்.
மாலையில் நடந்த பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகளை அரசு
மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜார்ஜ் வின்சென்ட் துவக்கிவைத்து
பரிசு வழங்கினார் இன்று (செவ்வாய்கிழமை) நடைபெறும் முகாமில் கலந்து
கொண்டு திருவண்ணாமலை நகராட்சி நகர அலுவலர் டாக்டர் எஸ்.வினோத்குமார்
சுகாதாரம் மற்றும் முதலுதவி குறித்த விழிப்புணர்வை பொதுமக்களுக்கு
ஏற்படுத்தவுள்ளார். மாலை 3 மணியளவில் நடைபெறும் தலைமை திறன் மற்றும்
வேலைவாய்ப்பு பட்டறை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு எஸ்கேபி பொறியியல்
கல்லூரி முதல்வர் வே.சுப்பிரமணிய பாரதி சிறப்புரையாற்றுகிறார் நாளை
புதன்கிழமை நடைபெறும் முகாமில் கலந்து கொண்டு மின்சார வாரிய
செயற்பொறியாளர் எம்.ராஜசேகரன் மின் சிக்கனம் பற்றிய விழிப்புணர்வு
பொதுமக்களுக்கு வழங்கவுள்ளார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தி.மலை எஸ்கேபி
பொறியியல் கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் செய்துள்ளார்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *