குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்

திருவண்ணாமலை, மே 18:

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே குடிநீர்
கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் நேற்று சாலை மறியல் போராட்டத்தில்
ஈடுபட்டனர் செய்யாறு அருகே பைங்கிணர் கிராமத்தில் சுமார் 600க்கும்
மேற்பட்டோர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். அங்கு கடந்த ஒரு மாதமாக
குடிநீர் சரிவர சப்ளை செய்யப்படவில்லையாம். இதுகுறித்து ஊராட்சி ஒன்றிய
ஆணையாளர்கள் மற்றும் ஊராட்சி செயலரிடம் அப்பகுதி மக்கள் பலமுறை புகார்
தெரிவித்தனர். ஆனாலும்  நடவடிக்கை எடுக்கவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த
பைங்கிணர் கிராம பெண்கள் மற்றும் பொதுமக்கள் நேற்று (புதன்கிழமை) காலை
காலி குடங்களுடன் செய்யாறு – ஆரணி சாலையில் மறியல் போராட்டத்தில்
ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல்
அறிந்த செய்யாறு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சமரச
பேச்சுவார்த்தை நடத்தினர். அதற்கு மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்
உடனடியாக எங்களுக்கு குடிதண்ணீர் சப்ளை செய்ய வேண்டும் என தெரிவித்தனர்.
அப்போது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அங்கு விரைந்து வந்து குடிநீர்
வழங்க ஏற்பாடு செய்வதாக தெரிவித்தனர். இதையேற்று சாலைமறியலை கைவிட்டு
பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

You might also like More from author