குடிநீர் பிரச்சனை- நரிக்குறவர்கள் மாவட்ட கலெக்டரிடம் முறையிட்டு பலனில்லை

திருவண்ணாமலை, மே 20:

தி.மலை மாவட்டம்  வாணாபுரம் அருகே குடிநீர்
பிரச்சனைக்காக கலெக்டரிடம் முறையிட்டும் பலனில்லையே என்று பொதுமக்கள்
வேதனையில் இருக்கின்றனர். வாணாபுரம் அருகே மெய்யூர் பஞ்சாயத்தில் உள்ள
ஓம்சக்தி நகரின் 65 குடும்பத்தைச் சேர்ந்த நரிக்குறவர்கள் வாழ்ந்து
வருகின்றனர். இவர்களுக்கு குடிநீர் சப்ளைக்காக 2 போர்வெல் மற்றும் 2 மினி
டேங்குகள் மூலம் குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வந்துள்ளது இந்நிலையில்
போர்வெல் மற்றும் மினி டேங்க் ரிப்பேர் ஆன நிலையில் கடந்த ஒருவருடமாக
இவர்களுக்கு சரிவர குடிநீர் வழங்கவில்லை. இவர்கள் குடிநீருக்காக பல
இடங்களில் அலைந்து திரிந்து தங்கள் தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர்.
இதுகுறித்து நரிக்குறவர் நலச்சங்க தலைவர் தேவா கூறுகையில் பலமுறை நாங்கள்
பிடிஒகளுக்கு மனு தந்தும், கலெக்டர் பிரசாந்த் வடநேரே விடம்
மனுகொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் தங்களின் குடிநீர்
தேவைக்காக 2 நாட்களுக்கு ஒருமுறை ரூ. 700 கட்டணம் செலுத்தி தனியார் லாரி
மூலம் தங்களின் குடிநீர் பிரச்சனையை தீர்த்துக்கொள்கிறோம். எனவே எங்கள்
பிரச்சனையை நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து தீர்க்க
வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என கூறினார்.

You might also like More from author