Naangamthoon Tamil Daily news | Online Live News | Latest Current affair News | channel website Naangamthoon news Live tamil Cinema news குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் - Naangamthoon

குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்

திருவண்ணாமலை, மே 3:

திருவண்ணாமலை அருகே உள்ள சிறுவள்ளூர் கிராமத்தில் 5
ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். நிலத்தடி நீர்மட்டம்
குறைந்துள்ளதால் இப்பகுதியில் உள்ளவர்களுக்கு சில நாட்களாக சீரான
குடிநீர் வழங்கப்படவில்லை. இதில் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று
(செவ்வாய்கிழமை) காலை சிறுவள்ளூர் கிராமத்திலுள்ள போளூர் –
மேல்சோழங்குப்பம் சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து
தகவல் அறிந்து விரைந்து வந்த கடலாடி காவல்துறை ஆய்வாளர் சுரேஷ் சண்முகம்
கலசபாக்கம் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள் சஞ்சீவ்குமார், சத்தியமூர்த்தி,
ஊராட்சி செயலர் நாராயணன் ஆகியோர் அங்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம்
பேச்சுவார்த்தை நடத்தினர். தற்போது கடுமையான வறட்சி காரணமாக குடிநீர்
தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குடிநீர் விநியோகம் செய்யும்போது
மின்மோட்டார் பொருத்தி குடிநீர் உறுஞ்சுவதால் தட்டுப்பாடு ஏற்படுகிறது என
குற்றச்சாட்டு உள்ளது. மின்மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சினால் கடும்
நடவடிக்கை எடுக்கப்படும். உடனடியாக தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க
நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையேற்று பொதுமக்கள் சாலை மறியலை
கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சுமார் 2
மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

You might also like More from author