குடும்ப பெண்ணின் அசாத்திய சாதனை!

சமூக அக்கறையில்  கடல்கடந்து மிளிர்கிறது பிசினஸ்!

அழகு! ஆரோக்கியம்! இந்த இரண்டு வார்த்தைக்கு மயங்காத மக்கள் இல்லை. இவ்விரண்டையும் பெற மக்கள் என்ன வேண்டுமானலும் செய்வார்கள்,  என்ன விலை கொடுக்கவும் தயங்கமாட்டார்கள்! இதை உணர்ந்த பல்வேறு கார்ப்பரேட் நிறுவனங்கள். இவர்களது பலவீனத்தை பயன்படுத்தி காசாக்க முயன்று அதில் இன்று வெற்றியும் பெற்று பல அழகு சாதனப்பொருட்களும், பல்வேறு ஆரோக்கியம் சார்ந்த பவுடர்களும் இன்று மார்க்கெட்டில் சக்கை போடு போட்டுகொண்டிருக்கின்றன. ஆனால் அதன் விளைவோ மிகவும் அபாயகரமானது. மக்கள் இதனால் பல்வேறு இராசயன பொருட்களை கையாண்டு மோசமான உடல் ஆரோக்கியத்துக்கும், தங்கள் நிரந்தர அழகையும் கெடுத்து கொள்ள தொடங்கிவிட்டார்கள். மஞ்சள் இட்டு அழகு தேவதயாய் மிளிரிய பெண்கள் இன்று இல்லை.  சிறுதானிய கஞ்சி குடித்து  80 வயதிலும் முறுக்கேறிய உடம்போடு வலம் வந்த நம் முன்னோர்கள் உடல்வாகு நமக்கு இல்லை. ஏன்? இதற்கு என்ன காரணம்?

மேல் நாட்டு மோகத்தில் மயங்கி அழகையும், ஆரோக்கியத்தையும் கெமிக்கல் க்ரீம் மற்றும் பவுடர்களில் தேடிய நாம் பல கோடி லாபம் தேடும் கார்ப்பரேட் நிறுவனத்தின் சுயநலக்காரர்களின் கையில் சிக்கினோம்.  அதன் விளைவாக நமக்கு கிடைத்த பரிசு, அழகு மட்டும்  ஆரோக்கிய கேடு மட்டும் தான்.

பல நூறு செலவு செய்து அழகிற்காக நாம் வாங்கும் க்ரீம்களும், ஆரோக்கியத்திற்காக நாம் வாங்கும் சத்து பவுடர்களும் நமக்கு நம் முன்னோர்களை காட்டிலும் அதீத அழகையும், வலிமையும் தானே தர வேண்டும் ஆனால் ஏன் தரவில்லை. மாறாக இன்று நமக்கு 30 வயதிற்க்குள்ளாகவே முகம் சுருக்கம், முடி உதிர்தல், நரை முடி தோற்றிவிடுகிறது. ஆரோக்கியம் கேட்கவே வேண்டாம் சர்க்கரை வியாதி, ப்ரஷர், மூட்டு வலி என்று அடிக்கிகொண்டே போகிறோம். 70 வயதிற்கு மேல் வாழ்ந்தாலே பெரிய விஷயம் என்றாகிவிட்டது. காரணம் என்ன?

என்றேனும் யோசித்தேனும் பார்த்து இருப்போமா? எதை பற்றியும் சற்றும் யோசிக்காமல் விளம்பரங்களில் மயங்கி, கெமிக்கல் எத்தகைய கேடுகளை விளைவிக்கும் என்று கூட அறியாமல், எத்தனை படித்தும் அறியாமை தீயில் சுழண்டு கொண்டிருக்கும் மக்கள் மத்தியில் மாற்றங்களின் தாயாய் உதித்திருக்கிறார் திருமதி.சாருமதி.

சாருமதி அவர்கள் இன்று நம் மக்களின் நிலையையும் எண்ணி பார்த்தார் அன்று நம் முன்னோர்கள் வாழ்ந்த வாழ்க்கைமுறையும் எண்ணி பார்த்தார். எத்தனை பெரிய மாறுதல், எவ்வளவு முரண்பாடுகள் இவை தான் நம் மக்கள் சந்திக்கும் பிரச்சனைகளுக்கான காரணம் என்பதையும் கண்டறிந்து. நம் ஆயூர்வேத மூலிகைகள், சித்த மருத்துவ சிறப்புகளையும் கண்டுணர்ந்து மாற்றத்தை கொண்டு வர நினைத்தோடு மட்டும் நின்றுவிடாமல் அதற்கான ஆராய்ச்சியிலும் இறங்கி சிறிதும் கெமிக்கல் கலக்காத இயற்கை முறையிலான அழகு சாதன பொருட்கள், ஆரோக்கியம் சார்ந்த பொருட்களை கண்டுபிடித்தார். அதனை மக்கள் பயன்படுத்தும் வகையில் வெளி சந்தைக்கும் அறிமுகப்படுத்தினர். அதன் விளைவு ஆச்சர்யம் தரும் ஆளுமை பெண்ணாக மாறியிருக்கிறார்.

இன்று கடல் கடந்தும் கொடிக்கட்டி பறக்கிறது அவரது பிசினஸ். எதையும் தாழ்வாக கருதாமல், சிறிது சமூக அக்கறையோடு யோசித்தால் சாதாரண விஷயங்கள் கூட  நம் அசாத்திய வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதற்கு இவரே சிறந்த உதாரணம்.

சமூக அக்கறையோடு பிசினஸ் புரட்சி செய்து மிளிரும் திருமதி. சாருமதி போன்றோர்கள் தான் பெண்மை உயிர்பித்து இருக்கிறது என்பதை நிரூபித்துக்கொண்டிருக்கிறார்கள்.

இந்த பெண்கள் தினத்தன்று  அவரை சிறப்பிப்பதில் நான்காம் தூண் பெருமைக்கொள்கிறது.

You might also like More from author