குழந்தைகள் தினத்தை புறக்கணித்த கூகுள்… சுந்தர் பிச்சைக்கு கேள்வி கணைகள்

இந்தியாவில் கொண்டாடப்படும் குழந்தைகள் தினத்திற்கு வாழ்த்து தெரிவிக்காமல் புறக்கணித்து இருக்கிறது கூகுள் நிறுவனம்.

சென்ற வருடம் கூகுள் குழந்தைகள் தினத்தை கொண்டாடியது என்பது குறிப்பிடத்தக்கது. குழந்தைகள் தினத்திற்கு தனது டூடுலில் புகைப்படம் வைக்காமல் ஹோல் பங்சரின் புகைப்படத்தை வைத்து இருக்கிறது.

கூகுளின் இந்த செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் சுந்தர் பிச்சை இந்தியராக இருந்து கொண்டு இப்படி இந்தியாவின் முக்கிய நாளுக்கு கூட மரியாதை செலுத்தாமல் இருக்கிறாரே என பலரும் குற்றச்சாட்டி வருகின்றனர்.

பொதுவாக உலகில் நடக்கும் முக்கியமான நிகழ்வுகளுக்கு எல்லாம் கூகுள் டூடுல் வெளியிடுவது வழக்கம். பெரும்பாலும் பிறந்த நாள், சிறந்த பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட நாள் என பலவற்றிற்கு கூகுள் டூடுல் வெளியிடும்.

நம்முடைய பிறந்தநாளை ஜிமெயில் மூலமாக தெரிந்து கொண்டு, நமக்கு மட்டும் வாழ்த்து தெரிவிக்கும் அளவுக்கு கூகுள் இந்த டூடுலை பயன்படுத்தி வருகிறது. ஆனால் கூகுள் தற்போது இந்த டூடுலில் குழந்தைகள் தினத்தை புறக்கணித்து இருக்கிறது.

You might also like More from author