கேரளாவில் 15 வயது சிறுமியை தாயாக்கிய 13 வயது சிறுவன் மீது வழக்குப்பதிவு

கேரளாவில் 15 வயது சிறுமியை தாயாக்கிய 13 வயது சிறுவன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளான்.

கொல்லம் மாவட்டத்தை சேர்ந்த 13 வயது சிறுவன், 15 வயது சிறுமியுடன் தவறான உறவு கொண்ட காரணத்தால் அச்சிறுமி கர்ப்படைந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 4 நாட்களுக்கு முன்னர் அச்சிறுமிக்கு குழந்தை பிறந்துள்ளது. அச்சிறுமியிடம் விசாரணை நடத்திய மருத்துவர், அச்சிறுமியின் பெற்றோருக்கு தகவல் தெரிவிப்பதற்காக, விவரத்தை கேட்டபோது, அச்சிறுமி எதையும் கூற மறுத்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து, பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பொலிசாரின் விசாரணையில் 13 வயது சிறுவன் இதற்கு காரணம் என தெரியவந்துள்ளது. தற்போது அச்சிறுவன் மீது வழக்குப்பதிவு செய்து கொல்லம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு தற்போது ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளான்.

மேலும், அச்சிறுவனின் பெற்றோர் சம்மதத்துடன் அவனின் ரத்தமாதிரிகள் மற்றும் டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ளப்படவிருக்கிறது.

இதில், அச்சிறுவன் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும் பட்சத்தில், அச்சிறுவன் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்படுவான் என எதிர்பார்க்கப்படுகிறது.

கேரளாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் 12 வயது சிறுவன் ஒருவன் பெண் குழந்தைக்கு தந்தையான சம்பவம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

You might also like More from author