கே.எஃப்.சி சிக்கன் உள்ளே ஒரு குழந்தையின் பல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

கே.எஃப்.சி சிக்கன் குறித்து பல எதிர்மறையான செய்திகள் வந்தாலும், அதற்கு அடிமையானவர்கள் மது அடிமைகள் போலவே அதனை விடுவதாக இல்லை.

இந்நிலையில் லண்டனின் Croydon பகுதியில் உள்ள கே.எஃப்.சி உணவு விடுதியில் Kush Wilson என்பவர் தனது குடும்பத்தினருடன் சாப்பிடச் சென்றுள்ளார்.

அப்போது உணவில் ஏதோ கல் போன்று இருந்துள்ளது. அதனை எடுத்துப் பார்த்து அதிர்ச்சியடைந்துவிட்டார்.

காரணம் அதில் குழந்தையின் பல் போன்ற ஒன்று இருந்துள்ளது. இதனையறிந்த கே.எஃ.ப்.சி நிர்வாகம் அவர் சாப்பிட்ட உணவிற்கு செலுத்திய பணத்தை திரும்ப அளித்ததோடு, மன்னிப்பும் கேட்டுள்ளது.

அதே நேரம் அது பல் அல்ல என்றும் வேறு ஒரு பொருள் என்றும் விளக்கம் அளித்துள்ளது.

You might also like More from author

WP Facebook Auto Publish Powered By : XYZScripts.com