கோடை வெயிலுக்கு – ஏடிஎம் காவலர் பலி

திருவண்ணாமலை, மே 20:

திருவண்ணாமலையில் கடும் கோடை வெயிலுக்கு ஏடிஎம்
காவலர் பரிதாபமாக உயிரிழந்தார். இவரையும் சேர்த்து இதுவரை 3 பேர் கோடை
வெயிலுக்கு பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலையில் பருவ
மழை பொய்த்ததால் மிகவும் கடுமையான கோடை வெயில் அடித்து வருகிறது. இதனால்
காலை 10 மணிமுதல் மாலை 5 மணிவரை மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே
வராமல் இருக்கின்றனர். தங்கள் வேலைகளை காலை நேரங்களிலும் மற்றும் மாலை
நேரங்களிலும் செய்கின்றனர். இதனால் முக்கியமான வணிக வளாகம் உள்ள
பகுதிககளில் மாலை நேரங்களில் மக்களின் நடமாட்டம் அதிகமாக இருப்பதால்
போக்குவரத்து தடை ஏற்படுகிறது. இந்நிலையில் கடந்த செவ்வாயன்று
திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை அருகில் ஒருவரும்,
புதனன்று காலை தி.மலை மத்திய பேருந்து நிலையத்தில் ஒருவரும், மாலை 4.30
மணியளவில் மத்தலாங்குளத்தெருவிலுள்ள (பெரியார் சிலை அருகில்) ஐடிபிஐ
வங்கியின் ஏடிஎம் காவலர் எம்.நடராஜன் (62) என்பவர் ஏடிஎம் இருந்து வெளியே
வந்தபோது கடும் வெயிலின் தாக்கத்தால் சாலையில் திடீரென மயங்கி
விழுந்துள்ளார். உடனே அருகில் இருந்தவர்கள் சிகிச்சைக்காக அவரை
திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ  மனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டார் என
கூறியுள்ளார். இவருடன் சேர்த்து கோடை வெயிலுக்கு திருவண்ணாமலையில்
பலியானவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. இதனால் திருவண்ணாமலை
மக்கள் வெயிலால் பாதிக்கப்படுவதுடன் பீதியிலும் உள்ளனர்.

You might also like More from author