கோஹ்லியை இன்னும் நாங்கள் ஆறு முறை டக் அவுட் ஆக வீழ்த்த வேண்டும்

இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லியை இன்னும் நாங்கள் ஆறு முறை வீழ்த்த வேண்டும் என்று அவுஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டார்க் கூறியுள்ளார்.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய அணி டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இவ்விரு அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 333 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

அதுமட்டுமின்றி ரன் மெஷின் என்று கூறப்படும், விராட் கோஹ்லி இப்போட்டியில் முதல் இன்னிங்ஸில் ஸ்டார்க் வேகத்தில் டக் அவுட்(ஓட்டம் எதுவுமின்றி) ஆனார், இரண்டாவது இன்னிங்ஸில் 13 ஓட்டங்கள் எடுத்து வெளியேறினார்.

இந்நிலையில் இதுகுறித்து அவுஸ்திரேலியா வேகப்பந்து வீச்சாளர் மிட்சல் ஸ்டார்க் கூறுகையில், இந்த டெஸ்ட் தொடரில் விராட் கோஹ்லியின் விக்கெட்டுதான் மிகவும் முக்கியமாக விடயமாக இருக்கப்போகிறது என்று தெரியும்.

இதனால் இந்த தொடரில் நாங்கள் சிறப்பான இடத்தைப் பிடிக்க இன்னும் 6 முறை அவரது விக்கெட்டை வீழ்த்த வேண்டியுள்ளது.

அவர் பெரிய அளவில், வலுவான நிலையுடன் மீண்டும் திரும்பி வருவார் என்பது எங்களுக்குத் தெரியும் என்று கூறியுள்ளார்.

மேலும் இப்போட்டியில் அவுஸ்திரேலியா வீரர் ஹேண்ட்ஸ்காம்ப் கொடுத்த கேட்சை முதல் ஸ்லிப் திசையில் நின்று கோட்டை விட்டார். மேலும் ஸ்டார்க்கை முதல் இன்னிங்சில் 50 ஓட்டங்களுக்கு மேல் எடுக்க விட்டுவி்ட்டார்.

இதனால் கோஹ்லியின் செயல்பாடு பெரிதும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like More from author

Facebook Auto Publish Powered By : XYZScripts.com