Feb 8, 2017
28 Views
0 0

கோஹ்லி ஆட்டமிழக்க செய்வது எப்படி ஆஸ்திரேலியா

Written by
banner

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதும் டெஸ்ட் தொடர் வருகிற 23 ஆம் திகதி தொடங்குகிறது.

இந்த தொடர் குறித்து அவுஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் டேரன் லீமென் கூறியதாவது, இந்தியாவுக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடர் எங்களுக்கு சவாலானதாக இருக்கும்.

ஆஸ்திரேலியா வீரர்கள் கடுமையாக உழைத்தால் மட்டுமே வெற்றிபெற முடியும். அதிலும் இந்திய வீரர் கோஹ்லியின் ஆட்டம் மிகச்சிறப்பாக உள்ளது. களத்தில் அவரை ஆட்டமிழக்க செய்வது எப்படி என்பதை பலவழிகளில் யோசித்து வருகிறோம்.

ஆனால், அதற்கான பதில் கிடைக்கவில்லை. அவரின் ஆட்டத்தை பலமுறை சிடியில் போட்டு பார்த்து, அவரை எப்படி ஆட்டமிழக்க செய்தது என்பது குறித்து வழியை தேடி வருகிறோம். ஆனால் தற்போது வரை அதற்கான வழி கிடைக்கவில்லை என்று கூறியுள்ளார்.

டெஸ்ட், ஒருநாள் கிரிக்கெட், டி20 என்று மூன்று வகையான கிரிக்கெட் போட்டிகளுக்கும் கோஹ்லியை கேப்டனாக நியமித்த பிறகு அவரது பேட்டிங்கின் தரம் மேலும் கூடியுள்ளது என்று கூறியுள்ளார்.

Article Categories:
விளையாட்டு

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *