Home அரசியல் சசிகலாவின் பதவியேற்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக டுவிட்டர் பக்கத்தில் OPS

சசிகலாவின் பதவியேற்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக டுவிட்டர் பக்கத்தில் OPS

14

சசிகலாவின் பதவியேற்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஓ.பன்னீர் செல்வத்தின் பெயரில் உள்ள டுவிட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

அதிமுக பொதுச்செயலாளரான சசிகலா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அக்கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் முதல்வராக தேர்வு செய்யப்பட்டார்.

7ஆம் தேதியான இன்றே முதல்வராக பதவியேற்கப் போவதாக ஓ.பன்னீர் செல்வம் பெயரில் உள்ள டுவிட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டது. பதவியேற்பு விழாவிற்கான பாதுகாப்புகளை கவனிக்க காவல்துறையினர் தயார் படுத்தப்பட்டனர்.

இந்நிலையில் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவின் தமிழக வருகை திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து, சசிகலாவின் பதவியேற்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஓ.பன்னீர் செல்வத்தின் பெயரில் உள்ள டுவிட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. சசிகலா முதல்வராக பதவியேற்பது எப்போது என்று அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வெளியாகவில்லை.