Feb 20, 2017
23 Views
0 0

சசிகலாவுக்கு எதிராக ஓபிஎஸ் பிரச்சாரம் செய்ய உள்ள வாகனம் தற்போது ரெடியாகியுள்ளது

Written by
banner

ஜெயலலிதா சமாதியில் தியானம் செய்த ஓபிஎஸ், சசிகலாவுக்கு எதிராக அதிரடியாக களமிறங்கினார்.

அதையடுத்து அதிமுகவில் பல உட்கட்சி பூசல் ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து சசிகலா முதல்வராவதற்கான வாய்ப்பு தள்ளி சென்றது. அதன் பின் சொத்துகுவிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் முதல்வராகும் வாய்ப்பு சசிகலாவுக்கு நழுவியது.

இதனிடையே சசிகலா தரப்பின் ஆதரவுடன் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். தன் பக்கம் அனைத்து எம்.எல்.ஏக்களும் வருவார்கள் என எதிர்பார்த்த் ஓபிஎஸ்க்கு 11 எம்.எல்.ஏக்கள் மட்டும் ஆதரவு தெரிவித்தனர்.

இந்நிலையில் சசிகலா ஜெயலலிதாவுக்கும், தமிழகத்தும் செய்த துரோகம் குறித்து தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்யப்போவதாக ஓபிஎஸ் தெரிவித்திருந்தார்.

தற்போது ஓபிஎஸ் பிரச்சாரம் செய்யவதற்காக பிரத்யேகமான வாகனம் ஓபிஎஸின் வீட்டில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஓபிஎஸ் விரைவில் தமிழகம் முழுவதும் பிரச்சாரத்தை தொடங்க உள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Article Categories:
அரசியல்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *