சச்சின் தனது மனைவியுடனான ரொமான்ஸை ரசிகர்கள் பார்க்க உள்ளனர்

இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவனான சச்சின் தனது மனைவியுடனான ரொமான்ஸை ரசிகர்கள் பார்க்க உள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் வரும் ஜுன் மாதம் 1-ஆம் திகதி சாம்பியன் டிராபி தொடர் நடைபெற உள்ளது.

இதில் எட்டு அணிகள் பங்கேற்கின்றன. இத்தொடரில் இந்தியா அணி பங்கேற்குமா, பங்கேற்காதா என்ற சந்தேகத்தின் போது, இந்திய அணி அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்திய அணியின் ஜாம்பவான் சச்சின் இதுகுறித்து கூறுகையில், ஒரு தொடரில் கிண்ணத்தை வென்றால் அது அணியின் அத்தனை வீரருக்குமே பொதுவானது.

தனிப்பட்ட நபர் மட்டுமே கொண்டாடும் விஷயமல்ல. கடந்த 2011-ஆம் ஆண்டு உலகக்கிண்ணம் தொடரைப்பார்த்தால், ஒவ்வொரு வீரரும் தங்களின் பங்களிப்பை அளித்தனர்.

இனிமேல் இந்திய அணிக்கு இன்னொரு சச்சின் தேவையில்லை, அதுநிச்சயம் வேறு ஒருவர் தான்.

எனது 24 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்தை ஒரே படத்தில் தெரிவித்துள்ளனர். குறிப்பாக எனது மனைவி அஞ்சலியுடனான ரொமான்ஸை ரசிகர்கள் பார்க்கவுள்ளனர் என்று கூறியுள்ளார்.

சச்சின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள Sachin: A Billion Dreams திரைப்படம் இம்மாதம் 26-ஆம் திகதி திரைக்குவர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like More from author

Facebook Auto Publish Powered By : XYZScripts.com