Naangamthoon Tamil Daily news | Online Live News | Latest Current affair News | channel website Naangamthoon news Live tamil Cinema news சபரிமலையில் கூட்ட நெரிசல்: 31 பேர் காயம், 8 பேர் கவலைக்கிடம் - Naangamthoon

சபரிமலையில் கூட்ட நெரிசல்: 31 பேர் காயம், 8 பேர் கவலைக்கிடம்

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல கால பூஜைகளுக்காக கடந்த நவ.,15ம் தேதி மாலை நடை திறக்கப்பட்டது. மறுநாள் மண்டல கால பூஜைகள் தொடங்கின. 41 நாள் நீடிக்கும் மண்டல காலம் நாளையுடன் நிறைவடைகிறது. மண்டல பூஜைகளை முன்னிட்டு ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்படுவது வழக்கம். கடந்த வியாழக்கிழமை ஆரண்முழா பார்த்தசாரதி கோயிலில் இருந்து கிளம்பிய தங்க அங்கி ஊர்வலம் இன்று பம்பை வந்தடைந்தது.

தங்க அங்கியை தரிசிப்பதற்காக ஏராளமான பக்தர்கள் கூடினர். தங்க அங்கி இன்று மாலை 6.30 மணிக்கு மாலிகபுரம் கோயில் அருகே வந்த போது பக்தர்களிடையே கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில், 31 பேர் காயம் அடைந்தனர். 8 பேர் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக பத்தினம்திட்டா கலெக்டர் தெரிவித்துள்ளார். ஒரே நாளில் 5 லட்சம் பேர் திரண்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டதாக கேரள போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
whatsapp-image-2016-12-25-at-10-13-05-pm whatsapp-image-2016-12-25-at-10-12-56-pmwhatsapp-image-2016-12-25-at-10-13-59-pm

You might also like More from author