Naangamthoon Tamil Daily news | Online Live News | Latest Current affair News | channel website Naangamthoon news Live tamil Cinema news சபாநாயகரின் செங்கோலை பறித்து ஓடிய எம்.எல்.ஏ., - Naangamthoon

சபாநாயகரின் செங்கோலை பறித்து ஓடிய எம்.எல்.ஏ.,

சட்டசபை சபாநாயகரின் செங்கோலை பறித்துக் கொண்டு, திரிணமுல் காங்கிரஸ், எம்.எல்.ஏ., திடீரென, சபையில் இருந்து ஓடியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முதல்வர் மாணிக் சர்க்கார் தலைமையிலான மார்க்சிஸ்ட் ஆட்சி நடக்கும் திரிபுராவில், சட்டசபை கூட்டத் தொடர் நடந்து வருகிறது. நேற்று, சபை கூட்டம் நடந்தபோது, ஊழல் புகாரில் சிக்கியுள்ள வனத்துறை அமைச்சருக்கு எதிராக, நடவடிக்கை எடுக்க வேண்டுமென, திரிணமுல் காங்கிரஸ், எம்.எல்.ஏ.,வான சுதிப் ராய் பர்மன், 50, உள்ளிட்டோர், சபையின் நடுப்பகுதிக்கு சென்று கோஷமிட்டனர்.

அவர்களை சமாதானப்படுத்த, சபாநாயகர் ராமேந்திர சந்திர தேப்நாத் முயற்சி செய்தார். அப்போது, யாரும் எதிர்பாராத வகையில், சபாநாயகரின் வெள்ளி செங்கோலை பறித்துக் கொண்டு, ஓடத் துவங்கினார் பர்மன். அவரை பிடிக்க, சபை காவலர்கள் துரத்திச் சென்றனர். அனைவருக்கும் போக்கு காட்டிய அவர், சபைக்கு வெளியே சென்றார். சிறிது நேரம் நடந்த இந்த துரத்தலுக்குப் பின், பர்மனை, சபை காவலர்கள் பிடித்து, அவரிடமிருந்த வெள்ளி செங்கோலை பறிமுதல் செய்தனர்.

இந்த சம்பவம், திரிபுரா சட்டசபையில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ”பர்மனின் நடவடிக்கை அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது,” என, சபாநாயகர் தேப்நாத் கூறியுள்ளார்.
முதல் முறையல்ல! : சபாநாயகரின் செங்கோல் பறிக்கப்படும் சம்பவம், இது முதல் முறையல்ல; திரிபுராவில் இதற்கு முன், மூன்று முறை இதுபோன்று நடந்துள்ளது.

You might also like More from author