சமத்துவ மக்கள் கட்சி சரத்குமார் எடுக்கும் புதிய முடிவு

சமத்துவ மக்கள் கட்சியை கலைத்துவிட்டு அதிமுகவுடன் ஐக்கியமாகும் முடிவில் சரத்குமார் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பன்னீர்செல்வம் அணி, எடப்பாடி அணி, தினகரன் அணி, திவாரகன் அணி என அதிமுக கட்சி நான்கு துண்டுகளாக சிதறி கிடக்கிறது.

இதனால் அதிமுக எம்எல்ஏக்கள் யாருக்கு ஆதரவு கொடுப்பது என தெரியாமல் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில், தற்போது தமிழகத்தின் முதல்வராக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி, அதிக எம்எல்ஏக்களின் ஆதரவுகளை பெற்று எப்படியாவது முதல்வர் நாற்காலியை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்.

மேலும், அதிமுகவில் சிதறிக்கிடக்கும் கோஷ்டிகளை இணைக்கும் முயற்சியும் தற்போது நடைபெற்று வருவதால், கடந்த தேர்தலில் அதிமுகவோடு இணைந்து போட்டியிட்ட சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சியை கலைத்துவிட்டு, அதிமுகவின் பக்கம் இழுக்க எடப்பாடி முடிவு செய்துள்ளார்.

சரத்குமார் அதிமுகவோடு இணையும் பட்சத்தில் அவருக்கு, ராஜ்யசபா எம்பி பதவி மற்றும் மாநில பொறுப்பு ஒன்றையும் வழங்கவிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

இதனால் சமத்துவ மக்கள் கட்சியை கலைத்துவிட்டு அதிமுகவோடு சரத்குமார் இணையவிருக்கிறார் என கூறப்படுகிறது.

You might also like More from author