சமூக வயைதளங்களில் பெண் ஆன்மீக பக்தர்களை அவதூறு பரப்பிய டிராபிக் ராமசாமியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய தி.மலை எஸ்.பி. இரா.பொன்னியிடம் புகார் மனு

திருவண்ணாமலை, மார்ச் 16:

சமூக வயைதளங்களில் மேல்மருவத்தூர் கோயில்
பங்காரு அடிகளாரையும், பெண் ஆன்மீக பக்தர்களையும் அவதூறு பரப்பிய
டிராபிக் ராமசாமியை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கோரி
திருவண்ணாமலை எஸ்.பி பொன்னியிடம் நேற்று புகார் மனு அளிக்கப்பட்டது.
கடந்த மாதம் 28ம் தேதி சமுக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னையில் இருந்து
திருச்சி சென்ற போது மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில் வழியாக
சென்றுள்ளார். அப்போது ஆதிபராசக்தி கோயில் வெளிப்புரத்தில் பங்காரு
அடிகளாரின் பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தது. இதனை அகற்ற வேண்டும் என்று
டிராபிக் ராமசாமி தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில் மாவட்ட
நிர்வாகத்தின் உத்தரவோடு அனைத்து பேனர்களும் அகற்றப்பட்டதாக
கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த மாதம் 28ம் தேதி டிராபிக் ராமசாமி மேல்மருவத்தூர்
ஆதிபராசக்தி கோயிலையும், பங்காரு அடிகளாரையும், கோயிலுக்கு செல்லும்
ஆன்;மிக பெண் பக்தர்களையும் தரக்குறைவாக அவதூறாக பேசி யூ-டியூப் போன்ற
சழுக வளை தலங்களில் பரப்பியுள்ளார். இந்த நிகழ்வு செவ்வாடை பக்தர்களிடையே
அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் நேற்று திருவண்ணாமலை மாவட்டம்
போளுர் பகுதியை சேர்ந்த செவ்வாடை பக்தர்கள் 200க்கும் மேற்பட்டோர்
திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு
கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சமுக வளைதலங்களில் அவதூறாக பேசி பரப்பிய வீடியோவை அகற்ற வேண்டும்
என்றும், டிராபிக் ராமசாமியை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது
செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போளுர் பகுதி ஆதிபராசக்தி கோயில்
பக்தர்களின் கோரிக்கையாக உள்ளது. டிராபிக் ராமசாமி மீது உரிய நடடிவக்கை
எடுக்கவில்லை என்றால் அனைத்து தாலுகா அளவிலும் உண்ணாவிரத போராட்டம்
உள்ளிட்ட தொடர் போராட்டத்தில் ஈடுபட போவதாவகவும் செவ்வாடை பக்தர்கள்
எச்சரிக்கை விடுத்தனர்.

You might also like More from author

Facebook Auto Publish Powered By : XYZScripts.com