சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும்: திருநாவுக்கரசர்

சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை உயர்த்தியிருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது. இந்த விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”நரேந்திர மோடி தலைமையில் அமைந்துள்ள பாஜக ஆட்சி தொடர்ந்து பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை தொடர்ந்து உயர்த்தி வருகிறது.

கடந்த 2014 ஆம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி விலகி, பாஜக ஆட்சி அமைகிற போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை 112 டாலராக இருந்தது. அன்று ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூபாய் 73. ஆனால் தற்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை 52 டாலராக இருக்கும் போது ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூபாய் 74.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைகிற போது பெட்ரோலியப் பொருட்களின் விலை நியாயமாக குறைக்கப்பட வேண்டும். ஆனால் அதற்கு மாறாக சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை ரூபாய் 1.50 உயர்த்தியிருப்பது நடுத்தர, சாமானிய மக்களை கடுமையாக பாதிக்கக் கூடியதாகும்.

கடந்த 15 மாதங்களில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூபாய் 69.50 உயர்த்தப்பட்டுள்ளது. இத்தகைய விலை உயர்வின் மூலமாக வருகிற வருமானத்தையும், பெட்ரோலியப் பொருட்களின் மீது அதிகமான கலால் வரி விதிப்பினாலும் வருகிற வருவாயைக் கொண்டு நிதி பற்றாக்குறையை சமாளிக்க பாஜக அரசு திட்டமிட்டு செயலாற்றி வருகிறது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மக்களுக்கு பாஜக கொடுத்த வாக்குறுதியை உதாசீனப்படுத்தும் வகையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை உயர்த்தியிருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது. இந்த விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும்” என்று திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

You might also like More from author