சமையல் கலை நிபுணரை நாயகனாக்கிய ராஜுமுருகன்

ஜெய்ண்ட் பிலிம்ஸ் பட நிறுவனத்தின் புதிய படத்துக்கான கதை, வசனத்தை ‘குக்கூ’, ‘ஜோக்கர்’ படங்களை இயக்கிய ராஜு முருகன் எழுதுகிறார். அறிமுக இயக்குனர் சரவணன் ராஜேந்திரன் திரைக்கதை எழுதி இயக்குகிறார். இதில் கோவையைச் சேர்ந்த ரங்கராஜ் என்கிற புதுமுகம் கதையின் நாயகனாக அறிமுகமாகிறார்.

“நல்ல கதை, திரைக்கதை, நல்ல தயாரிப்பாளர் எல்லாம் அமைந்து விட்டது. கதாநாயகனை தேடினோம். சலித்துபோன நேரத்தில் நண்பர் ஒருவரின் திருமணத்திற்கு நானும், சரவணன் ராஜேந்திரனும் கோவை சென்றிருந்தோம்.

அங்கே அற்புதமான உணவுக்கு காரணமான சமையல்கலை நிபுணரான ரங்கராஜை நண்பர் எங்களுக்கு அறிமுகப்படுத்தினார். அவரைப்பார்த்து பேசிய போது இவர் இந்த கதைக்கு சரியாக இருப்பார் என்று தோன்றியது.

இருவருக்கும் பிடித்துப்போக அவரிடம் நடிக்க விருப்பமா? என்று கேட்டோம். முதலில் தயங்கிய ரங்கராஜ் சிறிய மவுனத்திற்கு பின் ஒத்துக் கொண்டார். இப்போது அவர் அர்ப்பணிப்போடு எங்களோடு இணைந்திருக்கிறார்” என்றார்.

You might also like More from author

WP Facebook Auto Publish Powered By : XYZScripts.com