சம்பந்தனூர் கிராமத்தில் அம்மா திட்ட முகாம் 61 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

திருவண்ணாமலை, ஜன 22 :

திருவண்ணாமலை அருகே சம்பந்தனூர் கிராமத்தில் நடந்த அம்மா திட்ட முகாமில் 61  யனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை தாசில்தார் சி.பன்னீர்செல்வம் வழங்கினார்.

திருவண்ணாமலை வட்டம் சம்பந்தனூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீ அருள்மிகு நல்லாயி அம்மன் கோவில் வளாகத்தில் அம்மா திட்ட முகாம் நடைபெற்றது. முகாமிற்கு வந்த அனைவரையும்  மண்டல துணை தாசில்தார் அமுல் வரவேற்க, சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் கே.சரஸ்வதி, வட்ட வழங்கல் அலுவலர் ஆர்.சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முகாமில் புதிய குடும்ப அட்டை பெயர் சேர்த்தல், நீக்கல் கோரியும், பட்டா மாற்றம், முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகை கோரி மொத்தம் 99 மனுக்கள் பெறப்பட்டன. இதில்
61 மனுக்கள் ஏற்கப்பட்டன. 12 மனுக்கள் பரிசீலனையில் உள்ளது. 26 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இந்த முகாமில் பெறப்பட்ட மனுக்களில் தீர்வு காணப்பட்டு குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல் திருத்தம் செய்யப்பட்ட குடும்ப அட்டை, 61 பயனாளிகளுக்கும் மேலும் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் தாசில்தார் சி.பன்னீர்செல்வம் வழங்கினார்.

இதில் முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவர் பெ.ராமலிங்கம், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் எம்.நாராயணசாமி சிவகாமி, வருவாய் ஆய்வாளர் கே.மணிகண்டன், ஊராட்சி செயலர் ஆர்.இளவரசு, கோவில் முன்னாள் தர்மகர்த்தா, வே.பட்டுசாமி,  மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள், கிராம உதவியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில்  கிராம நிர்வாக அலுவலர் அ.அரிகிருஷ்ணன் நன்றி கூறினார்.

You might also like More from author