சர்வதேச உஷூ சாம்பியன்ஷிப்: இந்தியாவிற்கு முதன்முறையாக தங்கப்பதக்கம் பெற்று தந்தார் பூஜா கடியன்

மாஸ்கோ:
உஷூ மரபார்ந்த சீனச் சண்டைக் கலைகளை அடிப்படையாகக் கொண்ட ஒருவரோடொருவர் மோதும் உடல் திறன் விளையாட்டு ஆகும். பன்னாட்டு உஷூ கூட்டமைப்பு இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை சர்வதேச அளவில் உஷூ போட்டிகளை நடத்துகின்றது. முதல் சர்வதேச போட்டிகள் சீன தலைநகர் பீஜிங்கில் 1991-ம் ஆண்டு நடைபெற்றன.
உஷூ போட்டிகளில் டயோலு மற்றும் சான்டா என இரண்டு வடிவங்கள் உள்ளன.
இந்நிலையில், 14-வது சர்வதேச உஷூ போட்டிகள் ரஷியாவின் கஸான் நகரில் கடந்த மாதம் 29-ம் தேதி தொடங்கியது. இப்போட்டியின் 75 கிலோ எடைப்பிரிவில் இன்று இந்தியாவின் பூஜா கடியன், ரஷியாவின் எவ்ஜெனியா ஸ்டெப்பனோவாவை எதிர்கொண்டார். இதில் எவ்ஜெனியா ஸ்டெப்பனோவாவை வீழ்த்தி பூஜா கடியன் இந்தியாவுக்கு முதன்முறையாக தங்கப்பதக்கத்தை வென்று தந்துள்ளார்.

You might also like More from author

WP Facebook Auto Publish Powered By : XYZScripts.com