சவுதி அரேபியாவில் அனுபவமுள்ள செவிலியர் பணி 150 பேருக்கு வேலைவாய்ப்பு

திருவண்ணாமலை, மே 20:

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு. வடநேரே
வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சவுதி அரேபியாவில் உள்ள டையாவரம்
தனியார் மருத்துவமனைக்கு பி.எஸ்சி., டிப்மோ நர்சிங் தேர்ச்சியுடன்
ஹ¨மோடயாலிசஸ் பிரிவில் தொடர்ந்து இரண்டு வருட பணி அனுபவம் பெற்ற 150 ஆண்
பெண் செவிலியர்கள் தேவைப்படுகிறார்கள். தேர்ந்தெடுக்கப்படும்
செவிலியர்களுக்கு தகுதி மற்றும் அனுபவத்திற்கேற்ப குறைந்தபட்சம் ரூ.55
ஆயிரம் மாத ஊதியத்துடன், இலவச இருப்பிடம், விமான டிக்கெட், உணவு,
மருத்துவ காப்பீடு முதலியவை வழங்கப்படும். நேர்முகத் தேர்வு சென்னை
கிண்டியிலுள்ள ராயல் மெரிடியன் ஓட்டலில் வரும் 21, 22 ஆகிய தேதிகளில்,
பெங்களுரில் இன்பேன்டரி சாலையில் உள்ள மோனார்க் லக்சர் என்ற ஓட்டலில்
வரும் 23, 24ந் தேதிகளில் காலை 9 மணி முதல் நடைபெறும்.
விருப்பமும் தகுதியுமுள்ள ஹமோடயாலிசஸ் செவிலியர்கள் இன்று 19ந் தேதி
omceq049@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு
விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் விவரங்களுக்கு
omcmanpower.com என்ற வலைதளத்திலும் (044) 22505886 ,
22502267 , 22500417 , 8220634383 ஆகிய தொலைபேசி எண்கள் வாயிலாகவும்
அறிந்துகொள்ளலாம். எனவே, மேற்கண்ட தகுதியுடைய திருவண்ணாமலை
மாவட்டத்தினைச் சார்ந்தவர்கள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு அறிக்கையில்
தெரிவித்துள்ளார்

You might also like More from author