சாத்தனூர் அணையிலிருந்து குடிநீருக்காக தண்ணீர் திறப்பு

திருவண்ணாமலை மார்ச் 24:

திருவண்ணாமலை அடுத்த சாத்தனூர் அணையிலிருந்து
தண்ணீர் குடிநீருக்காக பொதுப்பணித் துறை அதிகாரிகளால் திறந்து
விடப்பட்டது. நிலத்தடி நீர் உயரவும் மக்களின் குடிநீர் பிரச்சனையை
சமாளிக்கவும் 306.72 மில்லியன் குடிநீர் திறந்து விட முடிவுசெய்யப்பட்டு
டேமிலிருந்து நேற்று காலை தண்ணீர் பொதுப் பணித் துறை அதிகாரிகளால்
திறந்து விடப்பட்டது. வினாடிக்கு 750 கன அடி நீர் செல்லுமளவிற்கு தண்ணீர்
திறந்து விப்பட்டுள்ளது. தேவைக்கேற்ப 306.72 மில்லியன் கன அடி அளவிற்கு
தினசரி திறக்கப்பட உள்ளது.

You might also like More from author