சாமியாருக்கு அடி, உதை – 3 பேர் கைது

திருவண்ணாமலை, பிப் 15:

திருவண்ணாமலை பவளக்குன்று அபிதகுஜாம்பாள் மண்டபம்
அருகே வசிப்பவர் ஸ்ரீ நித்யா பக்திமயாசாமி (32) மண்டபம் எதிரில் பூஜை
செய்ய இவரும் ஆனந்த பாலகுமார் என்பவரும் கடந்த 5ந் தேதி அந்த இடத்தை
சுத்தம் செய்தனர். அப்போது அங்கு வந்த திருவண்ணாமலை ஜெனகரபாறை தெருவைச்
சேர்ந்த மணி (20), அசோக்குமார் (20), சரவணன் ஆகியோர் ஸ்ரீ நித்யா
பக்திமாயாசாமியை ஆபாசமாக திட்டி சரமாரியாக அவரை கல்லால் தாக்கியதுடன்
காலால் எட்டிஉடைத்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதைத் தடுத்த
ஆனந்தபாலகுமாரும் தாக்கப்பட்டார். இதுகுறித்து திருவண்ணாமலை நகர
காவல்நிலையத்தில் ஸ்ரீ நித்யா பக்திமயாசாமி நேற்று புகார் செய்தார்.
அதன்பேரில் உதவி ஆய்வாளர் சுந்தரேசன் வழக்கு பதிவு செய்து மணி உள்பட 3
பேரையும் கைது செய்தனர்.

You might also like More from author