Feb 18, 2017
24 Views
0 0

சாம்சங் நிறுவனத்தின் புதிய தயாரிப்பான கேலக்ஸி S8 மாடல் விரைவில்

Written by
banner

சாம்சங் நிறுவனத்தின் புதிய தயாரிப்பான கேலக்ஸி S8 மாடல் விரைவில் வெளிவரவுள்ளதாக கடந்த சில மாதங்களாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

சாம்சங் கேலக்ஸி S8 மாடல் புதிய அறிமுகமாக டூயல் எட்ஜ் கர்வ் டிஸ்ப்ளே கொண்டுள்ளது என்பது, வெளியாகியுள்ள புகைப்படங்களில் இருந்து உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்த ஸ்மார்ட்போனுக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

கேலக்ஸி S8 மற்றும் கேலக்ஸி S8 பிளஸ் என இருவித மாடல்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இரண்டுமே QHD சூப்பர் அமோ LED 4K டிஸ்ப்ளேக்கள் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

சாம்சங் கேலக்ஸி S8 மாடல் ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட்டில் வரும் முதல் ஸ்மார்ட்போன் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 4 GB ரேம் மற்றும் 6GB ரேம் உடன் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் இந்த போன், 64 GB இண்டர்னல் ஸ்டோரேஜ் உடன் மற்றும் 256 GB மைக்ரோ எஸ்டி கார்ட் வசதியுடனும் வெளிவருகிறது. சாம்சங் கேலக்ஸி S7 மாடல் ஸ்மார்ட்போன் மாடல்போலவே இந்த சாம்சங் கேலக்ஸி S8 மாடல் ஸ்மார்ட்போனில் 12MP திறன்கொண்ட டூயல் பிக்சல் வசதிகொண்ட பின் கேமிராவும், 8MP திறன்கொண்ட செல்பி கேமிராவும் இருக்கும்

ஆண்ட்ராய்டு 7.0 நெளக்ட் ஓஎஸ் தான் இந்த மாடலில் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த போனின் பேட்டரி 3250 mAh திறன் கொண்டுள்ளதால் சார்ஜ் குறித்து கவலைப்படவேண்டிய அவசியம் இல்லை. மேலும் IP68 சான்றிதழுடன் இந்த போன் வருகிறது என்பது கூடுதல் சிறப்பானதாகக் கருதப்படுகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *