சாம்பியன்ஸ் டிராபி 2017 கிரிக்கெட் போட்டிகள் பரிசுத் தொகை விபரங்கள்

சாம்பியன்ஸ் டிராபி 2017 கிரிக்கெட் போட்டிகள் ஜீன் 1ம் திகதி இங்கிலாந்தில் தொடங்கவுள்ளது.

இதற்கான பரிசுத் தொகை விபரங்கள் வெளியாகியுள்ளது.

வெற்றி பெற்று சாம்பியன்ஸ் பட்டத்தை வெல்லும் அணிக்கு 14 கோடி ரூபாயும், இரண்டாம் இடம் பெறும் அணிக்கு 7 கோடி ரூபாயும் வழங்கப்படும்.

அரையிறுதி சுற்று வரை முன்னேறும் அணிகளுக்கு 2.8 கோடி ரூபாய் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் லீக் சுற்றில் மூன்றாவது இடம் பெறும் அணிக்கு 57 லட்சமும், கடைசி இடம் பெறும் அணிக்கு 38 லட்சமும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like More from author