சிகப்பழகை சிதறடிக்கும் தோல் புற்றுநோய்…!!!

உணவுகளாலும் ஊட்டச் சத்துக்களாலும் சுற்றுப்புற சுகாதாரக்கேடுகளாலும் நமது உடல் தோல், பலவகையில் பாதிக்கப்பட்டு வருவதை பார்த்தோம்.

மேலும், வெப்ப மண்டலப் பகுதிகளில் சூரிய ஒளியால் ஏற்படும் தோல் நோய்கள் அதிகம். அதாவது, உடலின் எந்தப் பகுதியில் அதிக அளவில் சூரிய ஒளி படுகிறதோ அந்த இடத்தில் நோய் வரும். அதோ நேரத்தில், சிகப்பு அழகன், அழகிகளை விட, கறுப்பு நிறத்தோல் உள்ளவர்களுக்கு அது ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதம் என்று சொல்லலாம்.

ஒருவருடைய தோலின் நிறத்துக்குக் காரணம் தோலில் இருக்கும் ‘மெலானின்’ என்ற நிறச்சத்துதான். கறுப்பு நிறத்தில் இருக்கும் இந்த மெலானின் எந்த அளவுக்கு அதிகமாக இருக்கிறதோ அந்த அளவுக்கு தோல் கறுப்பாக இருக்கும். அதே நேரத்தில், இந்த மெலானினுக்கு சூரிய ஒளியைத் தடுத்து தோல் புற்றுநோய் வராமல் காக்கும் சக்தி அதிகம். அதனால், கறுப்பு தோல் இருப்பவர்களுக்கு தோல் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. ஆனால், வெள்ளைத் தோல் இருப்பவர்களுக்கு, தோலில் மெலானின் குறைவாக இருப்பதால், அவர்களுக்கு சூரிய ஒளியால் உண்டாகும்  தோல் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். இன்றைய நவ நாகரீக யுவதிகள் தங்கள் முக அழகை பளபளப்பாக, சிவப்பாக வைத்துக் கொள்வதை பெருமை என நினைத்து கொள்கிறார்கள்.

இதற்காக இரசாயன கலவை பொருட்களை முகத்திலும், உடல்களிலும் இரவு, பகல் பாராமல் பூசி செயற்கையாக மெருகேற்றி வருகிறார்கள், இவர்களுக்கு ஒரு எச்சரிக்கை சிவப்பழகு வெள்ளை தோல்காரர்களே உங்களைத் தான் தோல் புற்றுநோய் சீக்கிரம் சிக்கென பற்றிக்கொள்ளும் என்கிறது  நமது GCT Nature’s Gift Herbals & Ayurvedic Products.

ஒரு தனி நபர், அவர் செய்யும் தொழில் காரணமாகவும் அவருக்குத் தோல் நோய்கள் வரக்கூடும். சிமெண்ட் பயன்படுத்தப்படும் கட்டட வேலை செய்பவர்களுடை கை, கால்களில் ‘டைக்ரோமேட்’ ஒவ்வாமையால் ‘எக்ஸிமா’ என்ற நோய் வருகிறது. அதேபோல், வீட்டு வேலை செய்பவர்கள் அதிக நேரம் தண்ணீரிலும், சோப்பு நீரிலும் வேலை செய்ய வேண்டி இருக்கிறது. அவர்களுடைய கால், கைகளில் எக்ஸிமா வரக்கூடும். இதை நாம் சேற்றுப்புண் என்று குறிப்பிடுவோம். தோலில் வரும் சிரங்கு, அக்கி போன்றவை பாக்டீரியா, வைரஸ் போன்ற கிருமிகளால் வருபவை. தொற்றுநோயான இவற்றை, ‘அக்கி’ என்ற பொதுவாகச் சொல்லி அவற்றுக்கு ‘கை’ வைத்தியம் செய்து கொள்வார்கள். அதாவது, மண் பானை ஓட்டைத் தண்ணீரில் ஊறவைத்துத் தேய்த்துத் தோலில் பூசுவார்கள். இது தவறு. இதனால் தோலில் அலர்ஜி ஏற்பட்டு, நீரும் சீழும் சேர்ந்து தீராத, தோல் நோயை ஏற்படுத்திவிடக்கூடிய அபாயம் உள்ளது.

அதே போல், சிலர் மஞ்சளையும் வேப்பிலையையும் அரைத்துப் பூசுவார்கள். வேறு ஒரு நோய்க்குக் கொடுக்கப்பட்ட மருந்தை இன்னொரு நோய்க்காகப் பூசுவார்கள். மருந்துக்கடைக்குச் சென்று ஏதோ ஒரு மருந்தை வாங்கிப் பயன்படுத்துவார்கள். இவை தவறான அணுகுமுறைகள். இவற்றால் ஏற்படும் பின்விளைவுகளை தீர்க்க முடியாமல் போய்விடக்கூடும். சில சமயங்களில் தோலே பிய்ந்து போய், சரிப்படுத்த முடியாமல் தீராத சிக்கலை ஏற்படுத்தி, சிலருக்கு உயிருக்கே ஆபத்தாக முடிந்துவிடும்.

உலகில், தோல் நோய்கள் அதிகமாக உள்ளன. ஆனால், அவற்றுக்கு உரிய முக்கியத்துவத்தை மருத்துவர்களோ, மக்களோ யாரும் சரிவர விபரம் கொடுக்கவில்லை என்பதுதான் வருத்தமான விஷயம். எனவே மேற்சொன்ன தோல் நோய்களிலிருந்து நம்மை பாதுகாத்து கொள்ள நமது GCT ல் உருவாக்கப்பட்டுள்ள மூலிகை ஆயுர்வேத மருந்துகளின் சிறப்பை இனி பார்ர்போம்.

உங்கள் ஆரோக்கியம் உங்கள் கையில், இலவச இயற்கை ஆலோசனைகள் பெற GCT Nature’s Gift,Herbal & Ayurvedic Products,7402081981 என்ற எண்ணில் அழகு கலை சிற்பி டாக்டர் சாருமதியை தொடர்பு கொள்ளலாம்.

 

You might also like More from author