சிக்னல்களில் விளம்பர பலகை வைக்க தடை

சென்னை: தமிழகம் முழுவதும் போக்குவரத்து சிக்னல்களில் விளம்பர பலகை வைக்க சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.போக்குவரத்து சிக்னல்களில் விளம்பர பலகை வைப்பதால், வாகன ஓட்டிகளின் கவனம் சிதறுகிறது. எனவே, விளம்பர பலகை வைக்க தடை விதிக்க கோரி, கோவை நுகர்வோர் மையம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த சென்னை உயர்நீதின்ற நீதிபதி எம். எம்.சுந்தரேஷ் தலைமையிலான அமர்வு, தமிழகம் முழுவதும் சிக்னல்களில் விளம்பர பலகை வைக்க தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது.

You might also like More from author