சீனா ஓபன் டென்னிஸ்: இரட்டையர் பிரிவு போட்டிகளில் சானியா, போபண்ணா காலிறுதிக்கு முன்னேற்றம்

பீஜிங்:
சீனா ஓபன் டென்னிஸ் தொடர் அந்நாட்டின் தலைநகரான பீஜிங்கில் கடந்த 29-ம் தேதி தொடங்கியது. அக்டோபர் 8-ம் தேதி வரை போட்டிகள் நடைபெற உள்ளன.
இத்தொடரின் பெண்கள் இரட்டையர் பிரிவில் இன்று நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்று போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா – சீனாவின் ஷூவாய் பெங் ஜோடி, பெல்ஜியத்தின் எல்சி மெர்டன்ஸ் – ஹாலாந்தின் டெமி ஸ்கூர்ஸ் ஜோடியை எதிர்கொண்டது. இப்போட்டியில், 7-5, 6-2 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்ற சானியா ஜோடி காலிறுதி போட்டிக்கு தகுதிப்பெற்றது.
ஆண்கள் இரட்டையர் பிரிவின் காலிறுதிக்கு முந்தைய சுற்று போட்டியில் இந்தியாவின் ரோகன் போபண்ணா – உருகுவேயின் பப்லோ கியூவாஸ் ஜோடி, சீனாவின் மாவோ காங் – சீ ஸாங் ஜோடியை எதிர்கொண்டது. இப்போட்டியில், சிறப்பாக விளையாடிய போபண்ணா ஜோடி, 6-0, 6-4 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்றது. இதன்மூலம் இந்த ஜோடி காலிறுதிக்கு முன்னேறியது.

You might also like More from author