சீன ஓபன் டென்னிஸ் போட்டி: அரைஇறுதியில் சானியா ஜோடி

சீன ஓபன் டென்னிஸ் போட்டி பீஜிங் நகரில் நடந்து வருகிறது. இதன் பெண்கள் இரட்டையர் பிரிவின் கால்இறுதியில் இந்தியாவின் சானியா மிர்சா- சீனாவின் ஷூய் பெங் ஜோடி 4-6, 6-2 (10-7) என்ற செட் கணக்கில் செக்குடியரசின் ஸ்டிரிகோவா-சினியகோவா இணையை வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறியது.

பெண்கள் ஒற்றையர் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் ருமேனியாவின் சிமோனா ஹாலெப் 6-2, 6-1 என்ற நேர் செட் கணக்கில் ரஷியாவின் கசட்கினாவை பந்தாடினார்.

இதே போல் பெட்ரா கிவிடோவா (செக்குடியரசு) 6-3, 6-4 என்ற நேர் செட்டில் சக நாட்டவர் ஸ்டிரிகோவாவை வீழ்த்தி அரைஇறுதியை எட்டினார். ஆண்கள் ஒற்றையர் கால்இறுதியில் ‘நம்பர் ஒன்’ வீரர் ரபெல் நடால் (ஸ்பெயின்) 6-4, 7-6 (0) என்ற நேர் செட்டில் ஜான் இஸ்னரை (அமெரிக்கா) சாய்த்தார்.

You might also like More from author