சூதாட்டம் ஆடிய 9 பேர் கைது 5 பைக்குகள் பறிமுதல்

திருவண்ணாமலை, ஏப். 1:

திருவண்ணாமலை அருகே உள்ள வாணாபுரத்தில் சூதாட்டம்
ஆடியதாக போலீசாரால் 9 பேர் கைது செய்யப்பட்டனர். வாணாபுரம் அருகே
பேராயம்பட்டு பகுதியைச் சேர்ந்த ஏழுமலை(63), ஏழுமலை(62), ஏழுமலை(52),
பாலசுப்ரமணி(53), தசரதன்(39), பழனி(42), சங்கர் (44), செல்வராஜ் (51)
மற்றும் ரமேஷ்(36) ஆகியோர் எடக்கல் ரோடில் உள்ள பால் சொசைடி அருகே பணம்
வைத்து சீட்டாட்டம் விளையாடிக் கொண்டிருந்தனர். இதனை நேற்று முன் தினம்
மாலை அப்பகுதியில் ரோந்து சென்ற வாணாபுரம் எஸ்ஐ சுபா மற்றும் எஸ்எஸ்ஐகள்
ராஜாராம்,ஸ்மாயில் மற்றும்சேகர் கொண்ட போலீஸ் குழுவினர் அங்கு சென்று
சீட்டு விளையாட்டில் ஈடுபட்டிருந்த ஒன்பது பேரையும் கைது செய்து
அவர்களிடம் இருந்து ரூ 16500 மற்றும் 5 பைக்குகளையும் கைபற்றி விசாரித்து
வருகின்றனர்.

You might also like More from author

Facebook Auto Publish Powered By : XYZScripts.com