சென்னையில் நடிகர் ரஜினிகாந்த்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது உருவபொம்மையும் எரிக்கப்பட்டது

தமிழகத்தின் தலைநகர் சென்னையில் நடிகர் ரஜினிகாந்த்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது கொடும்பாவியை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழர் முன்னேற்றப் படையினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சமீபத்தில் ரசிகர்களை சந்திக்கும் நிகழச்சியில் கலந்துக்கொண்ட நடிகர் ரஜினிகாந்த், போர் வரும்போது பார்த்துக்கொள்வோம் தயாராக இருங்கள் என தனது அரசயில் பிரவேசம் குறித்து சூசகமாகப் தெரிவித்தார்.

இதை பலர் விமர்சித்த நிலையில் ரஜினிக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழர் முன்னேற்றப்படை அமைப்பினர் போராட்டம் நடத்தவுள்ளதாக வந்த தகவலை அடுத்து அவரது வீட்டிற்கு பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், ரஜினிக்கு எதிர்ப்புத் தெரிவித்து, சென்னை கதீட்ரல் சாலையில் தமிழர் முன்னேற்றப்படை அமைப்பினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

அந்த அமைப்பின் தலைவர் வீரலட்சுமியின் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், ரஜினி அரசியலுக்கு வரக்கூடாது என முழக்கங்கள் எழுப்பப்பட்டு, அவரது உருவபொம்மையும் எரிக்கப்பட்டது.

You might also like More from author

WP Facebook Auto Publish Powered By : XYZScripts.com