சென்னை சுரங்கப்பாதையில் மெட்ரோ ரயில் சேவை நாளை முதல் தொடங்குகிறது

சென்னை திருமங்கலம், நேரு பூங்கா வரையிலான, சுரங்கப்பாதையில் மெட்ரோ ரயில் சேவை நாளை மே-14 ஆம் தேதி முதல் தொடங்குகிறது.

சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில் கடந்த மூன்று ஆண்டுகளாக மெட்ரோ ரயில் சேவை பணிகள் நடந்து வருகிறது. சென்னையில் இரு வழித்தடங்களில் மொத்தம் 45 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் முதற்கட்டமாக, கடந்த ஆண்டு கோயம்பேடு ஆலந்தூர்இடையே மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதையடுத்து, சின்னமலை- கோயம்பேடு வரைமெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, திருமங்கலம், நேரு பூங்கா வரையிலான, சுரங்கப்பாதையில் மெட்ரோ ரயில் சேவைநாளை முதல் தொடங்குகிறது. இந்த ரயில் பயணம் முழுவதும் சுரங்க பாதையில் அமைக்கப்பட்டுள்ளது .இந்த சுரங்கப்பாதையில் அண்ணாநகர், செனாய் நகர், பச்சையப்பன் கல்லூரி, கீழ்ப்பாக்கம் என 7 ரயில்நிலையங்கள் உள்ளன. பயணிகள் வசதி மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மெட்ரோ ரயில்அதிகாரிகள் நேற்று மே 12 விளக்கம் அளித்தனர்.

சுரங்கப்பாதையில் செய்யும் பயணத்தில் தீ விபத்து ஏற்பட்டால் ரயில் தானாகவே நின்று, கதவுகளைத்திறந்து கொள்ளும். ஒரு தண்டவாளத்திற்கும், மறு தண்டவாளத்திற்கும் இடையில் தடுப்பு இருப்பதால், பயணிகள் சுமார் 250 மீட்டர் நடந்து பாதுகாப்பான பகுதியை அடைய முடியும்.

ரயில் சேவையின் கட்டணமாக, திருமங்கலம் முதல் அண்ணாநகர் வரை 10 ரூபாயும், திருமங்கலம் முதல்செனாய்நகர், பச்சையப்பன் கல்லூரி வரை 20 ரூபாயும் திருமங்கலம் முதல் கீழ்ப்பாக்கம் வரை 30 ரூபாயும்திருமங்கலம் முதல் நேரு பூங்கா வரை 40 ரூபாயும் வசூலிக்கப்படும் என கூறப்படுகிறது.

மெட்ரோ ரயில் சேவை தொடக்க விழாவில், தமிழக முதல்வர் பழனிச்சாமி, மத்திய அமைச்சர் வெங்கையாநாயுடு, உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

அனைத்து வசதிகளையும் கொண்ட சுரங்க மெட்ரோ ரயில் பயணத்தில் செல்போன் சிக்னல் கிடைக்காது எனக்கூறப்படுகிறது. ஆனால், விரைவில் பயணத்தில் செல்போன் சிக்னல் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் எனமெட்ரோ நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

You might also like More from author