Mar 30, 2017
2 Views
0 0

செம்மரம் கடத்தலில் ராணியாக திகழ்ந்த விமான பணிப்பெண்ணை கைது

Written by
banner

செம்மரம் கடத்தலில் ராணியாக திகழ்ந்த விமான பணிப்பெண்ணை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

இந்தியாவில் ஆந்திர மாநிலத்தில் உள்ள மலை பகுதிகளில் விலை உயர்ந்த செம்மரங்கள் வெளிநாடுகளுக்கு கடத்தப்படுகின்றன.

இது சம்மந்தமாக கடந்த 2015ல் கடத்தல் மன்னன் லட்சுமணன் என்பவரை பொலிசார் கைது செய்தனர்.

இந்நிலையில், லட்சுமணன் சிறைக்கு சென்றதால் அவர் மனைவி சங்கீதா சாட்டர்ஜி (26) கடத்தல் தொழிலில் ஈடுப்பட்டு வந்தார்.

இவர் விமான பணிப்பெண்ணாக பணியாற்றியவர். பலரை துப்பாக்கியால் மிரட்டி செம்மரக்கடத்தல் தொழிலில் ஈடுபட்டு கோடிகோடியாக பணம் சம்பாதித்தார்.

சங்கீதாவை கைது செய்யும் முயற்சியில் பொலிசார் இருந்த போது அவர் நீதிமன்றம் மூலம் முன் ஜாமீன் வாங்கினார்.

இந்நிலையில், முன் ஜாமீன் முடிந்த பின்னரும் அவர் பொலிசில் சரண் அடையாமல் இருந்து வந்தார்.

இதையடுத்து அவரை பிடிக்க கைது வாரண்டு பிறக்கப்பட்டது. கொல்கத்தாவில் பதுங்கி இருந்த சங்கீதாவை பொலிசார் தற்போது கைது செய்து சிறையில் அடைத்துள்ளார்கள்.

Article Categories:
இந்தியா

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Facebook Auto Publish Powered By : XYZScripts.com