Apr 21, 2017
1 Views
0 0

செய்யாறில் மணல் கடத்திய 2 லாரிகள் பறிமுதல்

Written by
banner

திருவண்ணாமலை, ஏப் 21:

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு காவல்துறை துணைக்கண்காணிப்பாளர் குணசேகரன், ஆய்வாளர் மங்கையர்கரசி மற்றும் போலிசார் நேற்றுமுன்தினம் இரவு செய்யாறு படுக்கையில் மணல் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியிலிருந்து மணல் ஏற்றிவந்த 2 லாரிகளை தடுத்து நிறுத்த முயன்றனர். போலீசாரை பார்த்ததும் லாரி டிரைவர்கள் தப்பியோடிவிட்டனர். பின்னர் மணல் ஏற்றிவந்த லாரிகளை பறிமுதல் செய்தபோலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து தப்பியோடிய டிரைவர்களை தேடி வருகின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Facebook Auto Publish Powered By : XYZScripts.com