Home தமிழகம் செய்யாறு அருகே காப்பகத்தில் குழந்தை திடீர் சாவு

செய்யாறு அருகே காப்பகத்தில் குழந்தை திடீர் சாவு

55

திருவண்ணாமலை, மார். 8:

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே உள்ள
அழிவிடைதாங்கி கிராமத்தைச் சேர்ந்தவர் சாரதி (26), இவரது மனைவி சுகன்யா
(25), இவர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்க முன் திருமணமானது மகன் அஸ்வந்த்
(1) தம்பதியினர் செய்யாறு சிப்காட்டில் உள்ள கம்பெனியில் வேலை செய்து
வருகின்றனர். நேற்று இருவரும் கைக்குழந்தையுடன் வேலைக்கு வந்தனர்.
வழக்கம்போல் குழந்தையை கம்பெனியில் உள்ள காப்பகத்தில் விட்டு வேலைக்கு
சென்றனர். அப்போது திடீரென குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக
தெரிகிறது. இதுபற்றி தகவல் அறிந்த பெற்றோர் உடனடியாக காஞ்சிபுரம் அரசு
மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே
குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து சாரதி தூசி
காவல்நிலையத்தில் நேற்று புகார் செய்தார். அதன்பேரில் உதவி ஆய்வாளர்
கோதண்டபாணி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.