ஜெயலலிதா சமாதியில் நடிகர் அஜித்குமார் அஞ்சலி!

டிசம்பர் 5-ம் தேதி இரவு 11.30 மணிகு தமிழக முதல்வர் ஜெயலலிதா காலமானார்.ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டு இருந்த ஜெயலலிதா அவர்களின் உடலுக்கு பல்வேறு திரைத்துறையினர்,அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.  நேற்று (06.12.2016) மாலை மெரினா கடற்கரையில் எம்.ஜி.ஆரின் நினைவிடத்துக்கு அருகே அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

நடிகர் அஜித் பல்கேரியாவில் படப்பிடிப்பில் இருந்தார்.செய்தி கேள்விப்பட்டதும், அவர் சென்னைக்கு வர முடிவு செய்தார். ஆனால், அவருக்கு தொடர்ச்சியான விமான சேவை கிடைக்கவில்லை. அதனால், இன்று காலை 4.30 மணிக்கு சென்னை வந்தார். நேராக மெரினா கடற்கரைக்கு வந்தார் அஜித்குமார். அவருடன் அவரது மனைவி ஷாலினி, ஷாலினியின் தம்பி ரிச்சர்டு, PRO சுரேஷ் சந்திரா ஆகியோரும் உடன் இருந்தனர். மறைந்த முதல்வர் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் 10 நிமிடங்கள்  அஞ்சலி செலுத்தினார் அஜித்குமார்.

அங்கு இருந்தபோது, மூத்த பத்திரிகையாளர் துக்ளக் சோ இறந்த செய்தி கேள்விப்பட்டார் அஜித். அங்கு இருந்து அப்போலோ மருத்துவமனைக்கு விரைந்த அவர், சோவிற்கு அஞ்சலி செலுத்தினார்.

You might also like More from author

Facebook Auto Publish Powered By : XYZScripts.com