ஜெயலலிதா மரணத்திற்கு நீதி விசாரணை கோரி ஒபிஎஸ் அணியினர் பல ஆயிரக்கணக்கானோர் உண்ணாவிரதம்

திருவண்ணாமலை, மார். 9:

ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மங்கள் குறித்து
நீதிவிசாணை நடத்த மத்திய அரசை நேற்று வலியுறுத்தி திருவண்ணாமலையில்
முன்னாள் அமைச்சர் எஸ்.இராமச்சந்திரன் தலைமையில் உண்ணாவிரத போராட்டம்
நடந்தது. இதில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு நேற்று காலையில் உண்ணாவிரதம்
தொடங்கியது. முன்னாள் அமைச்சர் எஸ்.இராமச்சந்திரன் தலைமை தாங்க,  இந்த
உண்ணாவிரத போராட்டத்தை ஆர்.வனரோஜா எம்பி தொடங்கிவைத்தார். இதில் முன்னாள்
மத்திய இணை அமைச்சர் பேராசிரியர் பொன்னுசாமி, வடக்கு மாவட்ட பொருளாளர்
சுபாஷ்சந்திரபோஸ் , முன்னாள் வடக்கு மாவட்ட கழக செயலாளர் பையூர்
சந்தானம், தி.மலை தெற்கு மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் மோகன், ஆரணி
நகர செயலாளர் அசோக்குமார், ஒன்றிய செயலாளர்கள் பி.ஆர்.சேகர், வேலு,
முன்னாள் நகர செயலாளர் பூக்கடை கோபால், முன்னாள் மாவட்ட மாணவரணி துணைத
தலைவர் எஸ்.கோவிந்தராஜன், அம்மா பேரவை நகர செயலாளர் வெங்கடேசன், தி.மலை
நகர எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் ஜி.முருகன், முன்னாள் நகரமன்ற உறுப்பினர்
திவாகர் உள்பட தி.மலை தெற்கு, வடக்கு மாவட்டம் முழுவதுமிருந்து 15
ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒபிஎஸ் ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர். காலை 8
மணிக்கு தொடங்கிய இந்த உண்ணாவிரத போராட்டம் மாலை 5 மணிக்கு முடிவுற்றது

You might also like More from author

Facebook Auto Publish Powered By : XYZScripts.com