டோனி பிரம்மாண்ட பங்களாவை வாங்கி குடியேறியுள்ளார் வசதிகளை பாருங்கள்

இந்திய கிரிக்கெட் அணி வீரர் டோனி பல்வேறு நவீன வசதிகள் கொண்ட பங்களாவில் தனது குடும்பத்துடன் குடியேறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மகேந்தர சிங் டோனி ஆரம்ப காலத்தில் ராஞ்சியில் உள்ள ஒரு சிறிய வீட்டில் வசித்து வந்தார்.

பின்னர் கிரிக்கெட் வீரராக ஆன பின்னர் மூன்று மாடி கொண்ட வீட்டில் குடிபெயர்ந்தார். அங்கு அவர் மனைவி சாக்‌ஷி, மகள் ஷிவா, அப்பா பான் சிங், அம்மா தேவியுடன் வசித்து வந்தார்.

இந்நிலையில், டோனி ஏழு ஏக்கர் பரப்பளவில் ஒரு பங்களா வாங்கியுள்ளார்.

இதற்கு கைலாஷ்பதி என பெயரிடப்பட்டுள்ளது. இந்த பங்களாவில் இண்டோர் ஸ்டேடியம், நெட் பிராக்டிஸ் பண்ணும் இடம், நீச்சல் குளம், மாடர்ன் உடற்பயிற்சி நிலையம் உட்பட பல்வேறு நவீன வசதிகள் உள்ளது.

கைலாஷ்பதி பங்களாவுக்கு டோனியின் குடும்பம் கடந்த மாதம் 28ஆம் திகதி அட்சய திருதியன்று குடிபெயர்ந்துள்ளது.

You might also like More from author

Facebook Auto Publish Powered By : XYZScripts.com