Home தமிழகம் தனியர் பேருந்து மீது சுற்றுலா பேருந்து மோதியதில் 22 பக்தர்கள் படுகாயம்

தனியர் பேருந்து மீது சுற்றுலா பேருந்து மோதியதில் 22 பக்தர்கள் படுகாயம்

15

திருவண்ணாமலை, ஜன 28:

திருவண்ணாமலை அருகே நேற்று தனியர் பேருந்து மீது
ஆன்மீக சுற்றுலா வந்த பேருந்து மோதியதில் 22 பக்தர்கள் படுகாயமடைந்தனர்.
இவர்கள் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சேலம் மாவட்டம் கண்ணம்குறிச்சியில் இருந்து 40க்கும் மேற்பட்ட ஆன்மீக
பக்தர்கள் மேல்மருவத்தூருக்கு ஆன்மீக சுற்றுலா சென்றனர். திருவண்ணாமலை
மாவட்டம் தானிப்பாடி அடுத்த நாலாள்பள்ளம் அருகே நேற்று (வெள்ளிக்கிழமை)
அதிகாலை சென்றபோது சாலையோரம் நின்று கொண்டிருந்த மற்றோரு தனியார்
பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 22 பேர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்தவர்களில் 7 பேரை
தண்டராம்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி
செய்யப்பட்டனர். மேலும் 15 பேர் திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி
மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இந்த விபத்து குறித்து தனிப்பாடி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து
தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் திருவண்ணாமலை அரசு
மருத்துவமனையில் அனுமதிக்கபட்டவர்கள் சிலர் மேல்சிகிச்சைக்காக வேலூர்
அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து தானிப்பாடி
பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.